இந்த வருட பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. எச் வினோத், போனி கபூர், அஜித் ஆகிய மூவர் கூட்டணியில் மூன்றாவது படைப்பாக ரிலீஸ் ஆன துணிவு படத்திற்கு இப்போது வரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அஜித்தின் நெகட்டிவ் ரோல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த படத்திற்கு 250 கோடி வரை பாக்ஸ் ஆபீஸில் கலெக்சன் செய்துள்ளது. இந்த நிலையில் துணிவு படம் பிரபல ஓடிடி நிறுவனமான கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ரிலீஸ் ஆகி உலக அளவில் மாபெரும் சாதனை புரிந்திருக்கிறது.
Also Read: விஜய்யை பழிவாங்க துடிக்கும் பிரபலம்.. தானாக வந்து தலையை கொடுத்த அஜித்
இதுவரை இல்லாத அளவுக்கு துணிவு படம் ஓடிடி-யில் பென்ச் மார்க் ரெக்கார்டை பதிவு செய்துள்ளது. அதும் வெறும் 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் ட்ரெண்ட் ஆகி டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனை இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முதலாக இந்திய ஹீரோ செய்திருக்கும் மாபெரும் ரெக்கார்ட் ஆக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு நாளுக்கு நாள் ஓடிடி தளத்தில் உலக அளவில் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால், இந்திய திரையுலகமே தற்போது பெருமையில் திளைகிறது. இவ்வாறு துணிவு படத்தின் மூலம் தல அஜித் முதல் முதலாக இந்திய அளவில் மிரட்டி விட்டிருக்கிறார்.
Also Read: சம்பந்தமே இல்லாமல் லைனப்பில் வந்த இயக்குனர்.. ஆஹா புது உருட்டால் ஏகே-62 வந்த சோதனை!
அதுமட்டுமின்றி இளசுகள் விரும்பும் வகையில் பக்க ஆக்சன் படமாக இருக்கும் துணிவு படம் சர்வதேச அளவில் தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் ரசிகர்களை கவர்ந்திருப்பதை வைத்து தல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.
துணிவு செய்த நெட்ப்ளிக்ஸ் சாதனை

எப்போதுமே தமிழகத்தில் மட்டுமே மாஸ் காட்டுகிறார் அஜித் என்ற நிலையை மாற்றி, வெளிநாடுகளிலும் துணிவு படத்தின் மூலம் அஜித் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார். அதிலும் ஒரே நாளில் 27 நாடுகளில் ஓடிடி தளத்தின் மூலம் ட்ரெண்டாகி டாப் 10 இடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: லியோவிற்கு பயத்தை காட்ட வரும் ஏகே 62 போஸ்டர்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?