Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

‘டெரே இஷ்க் மேன்’ படத்தின் முதல் ஆண்டு நிறைவு: டி-சீரிஸ் வெளியிட்ட ஸ்பெஷல் பதிவு!

‘டெரே இஷ்க் மேன்’ படத்தின் முதல் ஆண்டு நிறைவு: டி-சீரிஸ் வெளியிட்ட ஸ்பெஷல் பதிவு!

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘‘டெரே இஷ்க் மேன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.இதனை முன்னிட்டு பட யூனிட்டும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

டைரக்டர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் சங்கர் என்ற கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் முக்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.‘ராஞ்சனா’படத்துடன் ஆன்மிக ரீதியான தொடர்பைக் கொண்ட படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டது.ஆராய்ச்சி மாணவரான ஒரு பெண்ணைச் சுற்றி, பிரிவு மற்றும் மீண்டும் இணைதல் எனப் பல ஆண்டுகளைக் கடந்து செல்லும் காதல் கதையாக இப்படத்தின் ஸ்கிரீன் ப்ளே அமைந்திருந்தது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்திற்கு முக்கிய பலமாக அமைந்தது.குறிப்பாக, கதையின் உணர்வுகளையும் கேரக்டர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன.2025 நவம்பர் 28ஆம் தேதி வெளியான இப்படம்,உலகளவில் 162 கோடி வசூல் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் வெளியிட்ட பதிவும் கவனம் பெற்றுள்ளது. தனுஷ் – கீர்த்தி சனோன் இருவரின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி , கீர்த்தியின் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் படத்தின் மறக்க முடியாத இசை ஆகியவற்றை ரசிகர்கள் மீண்டும் நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர்.வெளியான ஓராண்டுக்குப் பிறகும் ரசிகர்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பதை சமூக வலைதளப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.