வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முத்து கொடுத்த பணத்தை வேண்டாம்னு சொன்ன நண்பர்.. மீனா செஞ்ச காரியம், ரோகிணிக்கு கிடைத்த பணம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து நண்பருக்கு உதவி செய்யும் வகையில் ஒரு லட்ச ரூபாய் பணம் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார். அதற்காக வீட்டிற்கு வந்து மீனாவிடம் இருக்கும் பணத்தை கேட்கிறார். ஆனால் மீனா ஆடம்பரம் செலவுக்காக என்னால் பணம் கொடுக்க முடியாது. நண்பர் இக்கட்டான சூழலில் இருக்கும் பொழுது உதவி செய்வது தான் சிறந்தது.

அதற்காக தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பணத்தை தூக்கி கொடுத்தால் நாம் தான் ஏமாளியாக போவோம் என்று முத்துவிடம் வாக்குவாதம் செய்து பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அப்செட் ஆன முத்து மொட்டை மாடிக்கு போயி பணத்துக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கும் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது.

பிரச்சனையை தீர்த்து வைத்த ஸ்ருதி ரவி

இது சம்பந்தமாக மனோஜிடம் என் தோழிக்கு ஒரு பிரச்சனை அதனால் அவளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேணும். நான் உன்னிடம் வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் இப்பொழுது என்னை நம்பி ஒரு லட்ச ரூபாய் எனக்கு கொடு என்று கேட்கிறார். ஆனால் மனோஜ் அப்படி எல்லாம் பணத்தை ஈசியாக கொடுத்து விட முடியாது. அதுவும் நண்பருக்கு கொடுத்தால் திருப்பி கிடைக்கவே கிடைக்காது. அதனால் நான் தரமாட்டேன் என்று சொல்கிறார்.

இதனால் கோவப்பட்ட ரோகினி, அந்த ஜீவாவை நம்பி 27 லட்ச ரூபாயை திருடி கொடுத்தாய். என்னை நம்பி ஒரு லட்ச ரூபாய் கூட பணம் தர மாட்டியா? அதுவும் உன்னிடம் இருக்கும் பணத்தை நான் தான் புத்திசாலித்தனமாக ஜீவாவிடம் இருந்து வாங்கி கொடுத்தேன். என்னையே இப்பொழுது நம்பாமல் என்னை அசிங்கப்படுத்தி பேசுகிறாய் என்று ரோகினி, மனோஜிடம் சண்டை போடுகிறார்.

அதற்கு மனோஜ் என்ன சொன்னாலும் என்னால் பணம் தர முடியாது என்று சொல்லி மொட்டை மாடிக்கு போய் விடுகிறார். அங்கே ரவியும் போன நிலையில் ஒவ்வொருவரும் ஏதோ யோசனையில் இருக்கும் பொழுது ரவி என்ன ஆச்சு என்று கேட்கிறார். அப்பொழுது முத்து, மீனாவிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்ட பணத்தையும், மனோஜிடம் ரோகிணி ஒரு லட்ச ரூபாய் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததையும் சொல்லி டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.

அதே மாதிரி அடுப்பாங்கரையில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சுருதி வந்து என்னாச்சு மீனா ஏன் அப்செட் ஆக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்பொழுது அங்கு வந்த ரோகினி, என் தோழிக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஒரு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. உங்ககிட்ட இருந்தா குடுங்க சுருதி நான் அடுத்த மாசம் திருப்பிக் கொடுக்கிறேன் என்று கேட்கிறார்.

அப்பொழுது மீனாவும் இந்த விஷயத்தில் தலையிட்டு ரோகினி மற்றும் மீனாவும் முட்டிக் கொள்ளும் அளவிற்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. கடைசியில் இவர்களுக்கு தீர்வாக சுருதி மற்றும் ரவி தனித்தனியாக ஐடியா கொடுக்கிறார்கள். அதாவது நண்பர்களுக்கு சும்மா கொடுக்க தேவையில்லை, கொடுக்கிற பணத்திற்கு ஏற்ற மாதிரி வட்டி வாங்கிட்டு பணத்தை கொடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் நமக்குத் தெரிஞ்ச நண்பர்கள் ஆடம்பர செலவு செய்கிறார்கள் என்றால் அவர்களை பார்த்து இந்த மாதிரி செலவு செய்தால் பின்னாடி குடும்பத்தில் பணம் பிரச்சனை வரும் பொழுது சமாளிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனால் வருமானத்துக்கு ஏற்ற மாதிரி செலவு செய்து நிம்மதியாக வாழலாம் என்று அட்வைஸ் பண்ணுங்கள். அதன் மூலம் உங்களுடைய நண்பரும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்வார் என்று சுருதி ஐடியா கொடுக்கிறார்.

உடனே ரோகிணி மற்றும் மீனாவிற்கு இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விடுகிறது. இதனை அடுத்து ரோகிணி, மனோஜிடம் எனக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய் பணம் கொடு. அதற்கு நான் என் தோழியிடம் இருந்து வட்டி வாங்கி தருகிறேன் என்று சொல்லி மனோஜிடம் பணத்தை வாங்கி விடுவார். அதே மாதிரி மீனா, முத்துவின் நண்பரை பார்த்து நம் வரவுக்கு ஏற்ற மாதிரி தான் செலவு செய்ய வேண்டும்.

கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்தால் திருப்பிக் கொடுக்கும் பொழுது நீங்க தான் கஷ்டப்படணும். அதனால் உங்களுடைய தங்கச்சியாக இருந்து நான் சொல்கிறேன். உங்களால என்ன முடியுமோ அதற்கு ஏற்ற மாதிரி செலவு பண்ணுங்கள் என்று மீனா முத்துவின் நண்பருக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இது எதுவும் தெரியாத முத்து, நண்பரிடம் கொடுத்த வாக்குறுதிக்காக வெளியிடத்தில் வட்டிக்கு பணம் வாங்கி நண்பரிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறார்.

ஆனால் முத்துவின் நண்பர் மீனா சொன்னதை ஞாபகம் வைத்து முத்து கொடுத்த பணத்தை வேண்டாம் என்று திருப்பிக் கொடுக்கிறார். பிறகு காரணம் என்ன என்று தெரிய வரும் பொழுது மீனா சொன்ன விஷயங்கள் உண்மையாக தான் தெரிகிறது. அதனால் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் பொழுது நான் மட்டுமில்லாமல் என் குடும்பமும் அவஸ்தை படணும். அதனால் கோவிலில் வைத்து என்னுடைய அப்பா அம்மா அறுபதாவது கல்யாணத்தை நல்லபடியாக முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News