Good Bad Ugly: அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி இன்னும் சில தினங்களில் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாய் சம்பவமாக படத்தை எடுத்துள்ளார்.
அதற்கு சமீபத்தில் வெளியான டிரைலர் தான் சாட்சி. ஜிவி பிரகாஷ் இசையில் பின்னி இசை மிரட்டி விட்டது. அதற்கேற்றார் போல் அஜித்தின் புது பரிமாணம் எப்படா படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.
அதேபோல் தற்போது டிக்கெட் முன்பதிவு அமோகமாக இருக்கிறது. புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது.
சரிந்து விழுந்த பிரம்மாண்ட கட் அவுட்
அது மட்டும் இன்றி படத்தை தியேட்டர்களில் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். அதை முன்னிட்டு திருநெல்வேலி பிரபல தியேட்டரில் அஜித்தின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கும் பணிகள் நடந்து வந்தது.
கிட்டத்தட்ட 200 அடியில் அதை அமைப்பதற்கு ரசிகர்கள் பரபரப்பாக வேலை செய்து வந்தனர். ஆனால் திடீரென அந்த கட்டவுட் சரிந்து விழுந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆனால் அங்கு இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது. இருப்பினும் இது போன்ற முயற்சிகளை அரசு கவனத்தில் கொண்டு தடை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்து வருகிறது.
இப்படித்தான் துணிவு பட ரிலீசின் போது ரசிகர் ஒருவர் ஓடும் வாகனத்தின் மீது ஏறி ஆடிய போது தவறி விழுந்து இறந்தார். தற்போது பட ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
இது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். படத்தை படமாக பாருங்கள். தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.