வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோட் வெற்றிக்கு விஜய்க்கு கொடுத்த பரிசு.. செம மாஸ் ஆக கையில் மோதிரத்தை போட்டு தெறிக்க விட்ட தளபதி

Vijay Goat Ring: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படம் வழக்கம்போல் வசூல் அளவில் பட்டையை கிளப்பி விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப ரிலீசாகி 25 நாட்களிலேயே 450 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலை அடைந்து விட்டது. இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கு ஏற்ப சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் போன்ற பல ஆர்டிஸ்ட்கள் நடித்து பான் இந்தியா திரைப்படம் ஆக வெற்றி பெற்றுவிட்டது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் கடைசி படத்தை எச் வினோத் இயக்கப் போகிறார். இந்த படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலகப் போவதால் கடைசி படம் மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும். அத்துடன் சில முக்கியமான ஆர்டிஸ்ட்களையும் நடிக்க வைக்க வேண்டும் என்று அதிக பொருள் செலவில் படம் தயாரிக்க இருக்கிறார்கள்.

vijay goat (1)
vijay goat (1)

இந்த சூழ்நிலையில் விஜயுடன் தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் போன்ற பல ஆர்டிஸ்ட்கள் இணைந்து இருக்கிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக இன்று இப்படத்தின் பூஜை விழா வெற்றிகரமாக முடிந்து விட்டது.

இதில் கலந்துகொண்ட அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா, யாரும் எதிர்பார்க்காத விதமாக கோட் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பூஜை முடிந்த கையுடன் விஜய்க்கு மோதிரத்தை ஒன்று பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த மோதிரத்தில் கோட் என எழுதப்பட்டு இருக்கிறது. அதை விஜய் விரலில் போட்டு செம மாசாக போஸ் கொடுத்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Trending News