செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: குணசேகரன் விரித்த வலையில் சிக்கிய ஞானம்.. கரிகாலன் மூலமாக மருமகள்களுக்கு விழப்போகும் பெருத்த அடி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் அடிப்பட்ட பாம்பாக கொத்துவதற்கு தகுந்த நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இனி இந்த வீட்டில் மருமகளாக ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணிய பெண்கள் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்தார்கள்.

ஆனால் இவர்களை இப்படியே விட்டுவிட்டால் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து விடுவார்கள் என்று குணசேகரன் பக்காவாக பிளான் போட்டார். அதன்படி ஒவ்வொருவரிடமும் நைசாக பேசிய அவர்களை இந்த வீட்டிலே இருக்கும்படி வைத்து விட்டார். ஆனாலும் நீங்கள் நினைத்தபடி சாதிக்கலாம் ஜெயிக்கலாம். நான் எதுவும் உங்கள் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

இதனை தொடர்ந்து மருமகள்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கனவை நோக்கி போராட முடிவு எடுத்து விட்டார்கள். அதற்கு முதற்கட்டமாக நந்தினி தயாரிக்கும் உணவு வகைகளின் பவுடரை வைத்து பிசினஸ் பண்ணலாம் என்று பேங்கில் லோன் கேட்க கிளம்பி விட்டார்கள். ஆனால் அங்கே சொத்து இருக்கும் நபர் யாராவது ஒருவர் ஜாமின் கையெழுத்து போட்டால் உங்களுக்கு லோன் கிடைத்து விடும் என்று சொல்கிறார்.

மருமகளுக்கு எதிராக சதியை தீட்டிய குணசேகரன்

பிறகு குணசேகரன் வீட்டு மருமகள் என்று தெரிந்ததும் அவரை வந்து ஒரு கையெழுத்து போட்டால் போதும் என்று பேங்க் மேனேஜர் சொல்கிறார். இதை கேள்விப்பட்ட நந்தினி அப்படி ஒரு பிசினஸும் தேவையில்லை பணமும் தேவையில்லை என்று வீரமாக பேசிவிட்டு வெளியே வந்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து அடுத்த கட்ட முயற்சி எப்படி எடுக்கலாம் என்று வழக்கம்போல் நான்கு மருமகளும் சேர்ந்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு இடையில் ஞானம் மொத்த பணத்தையும் எடுத்து கருவாடு பிசினஸ் பண்ணலாம் என்று யாரையோ நம்பி போயிருக்கிறார். அங்கே போய் பார்த்தால் கரிகாலன் பெரிய ஆளாக மாறி தோரணை எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.

கடைசியில் கரிகாலனுடன் கூட்டணி வைத்து ஞானம் மொத்த பணத்தையும் தொலைத்து ஏமாந்து போய் நிற்கப் போகிறார். ஆனால் இதற்குப் பின்னணியிலும் குணசேகரனின் சூழ்ச்சி தான் இருக்கும். எப்படியாவது ஞானம் வைத்த பணத்தை அவரிடம் இருந்து உருவி விட்டால் ரேணுகாவின் நம்பிக்கையை உடைத்து விடலாம் என்பதற்காக இந்த மாதிரி வலை விரித்து இருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு மருமகளுக்கும் கமுக்கமாக இருந்து சதி வேலையை செய்து வெற்றியை குணசேகரன் தடுக்க பார்க்கிறார். அந்த வகையில் இன்னும் பல மாதங்களாக இவர்கள் போராடும் வகையில் நாடகத்தை இழுத்தடித்து கடைசியில் தான் ஜெயித்து விட்டதாக காட்டப் போகிறார்கள்.

Trending News