வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எம்மாடியோ, ஒரே நாளில் போட்ட மொத்த காச எடுத்த கோல்டு மூவி.. சொந்த ஊரில் கல்லா கட்டிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் உள்ளதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுமட்டுமின்றி இப்போது பாலிவுட்டிலும் முதல் முறையாக ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் சொந்த மொழியான மலையாளத்தில் உருவான கோல்டு படம் நேற்று வெளியானது.

இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. பிரேமம், நேரம் போன்ற படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Also Read : பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 6 டாப் ஹீரோயின்கள்.. கல்யாணம், குழந்தைக்கு பின்னும் எட்ட முடியாத உயரத்தில் நயன்தாரா

இந்நிலையில் கோல்டு படத்திற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் எதுவும் செய்யவில்லை. ஆனால் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சாதாரணமாக நயன்தாரா மற்ற மொழி படங்களுக்கு தற்போது 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

இப்படம் தனது சொந்த ஊரான கேரளாவில் மலையாள மொழியில் எடுப்பதால் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது. ஏனென்றால் அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு இரண்டு முதல் மூன்று கோடி தான் சம்பளம் கொடுக்கப்படும்.

Also Read : விளம்பரம் இல்லாமல் 7 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுத்த இயக்குனர்.. நயன்தாராவின் கோல்ட் எப்படி இருக்கு? விமர்சனம்

மேலும் கோல்டு படம் கிட்டத்தட்ட 7.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் கேரளாவில் மட்டும் முதல் நாளில் 3.4 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் 1.3 கோடி வசூலை தாண்டி உள்ளதாம். மொத்தமாக உலக அளவில் கோல்டு படம் முதல் நாளில் 5 கோடி வசூல் செய்துள்ளது.

கோல்டு படத்திற்கு கிடைத்துவரும் நேர்மையான விமர்சனத்தினால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று இரண்டாவது நாள் முடிவில் போட்ட காசை கோல்டு படக்குழுவினர் எடுத்து விட்டனர். இனி வருவது எல்லாமே படக்குழுவுக்கு லாபம் தான்.

Also Read : பாப் கட்டிங், ட்ரெண்டாகும் நயன்தாராவின் பள்ளிப்பருவ புகைப்படம்.. அழகுல மயங்கி விக்னேஷ் சிவன்

Trending News