Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

யூடியூப் களைகள் அகற்றப்படுமா.? சோசியல் மீடியா கோமாளிகளின் கொடூர முகம், கவனிக்குமா அரசு.?

யூடியூப் களைகள் அகற்றப்படுமா.? சோசியல் மீடியா கோமாளிகளின் கொடூர முகம், கவனிக்குமா அரசு.?

Youtube: உன் சைஸ் என்ன அவ வயசு என்ன அப்படின்னு வடிவேலு சொல்வது போல் தான் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட அலப்பறைகள் நடக்கிறது. ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ போட்டு கல்லா கட்ட ஆரம்பித்து விட்டனர். […]

Youtube: உன் சைஸ் என்ன அவ வயசு என்ன அப்படின்னு வடிவேலு சொல்வது போல் தான் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட அலப்பறைகள் நடக்கிறது.

ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ போட்டு கல்லா கட்ட ஆரம்பித்து விட்டனர். முன்பெல்லாம் சமையல் உள்ளிட்ட உபயோகமான வீடியோக்கள் தான் யூடியூப் தளங்களில் வரும்.

ஆனால் எப்போ இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஆகியவை பிரபலமானதோ மக்கள் 24 மணி நேரமும் அதில் தான் பொழுதை கழிக்கின்றனர். அதிலும் வேலை வெட்டிக்கு போவதை கூட விட்டுவிட்டு ஆடி பாடி சம்பாதிக்கின்றனர்.

இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கலாம். ஆனால் முகம் சுளிக்கும் படியான வார்த்தைகளும் நடனமும் நிச்சயம் கலாச்சார சீர்கேடு தான்.

சோசியல் மீடியா கோமாளிகளின் கொடூர முகம்

அதிலும் குழந்தைகளை இரட்டை அர்த்த பாடலுக்கு ஆட வைத்து ரீல்ஸ் போடுவதில் தொடங்கி இன்னும் பல கூத்துகள் அரங்கேறி வருகிறது. அதில் சில பெண்கள் எல்லை மீறி பேசுவதும் ஆடுவதும் கடும் விமர்சனம் தான்.

நாடு எதை நோக்கி போகுதுன்னு தெரியல. முதல்ல இந்த சோசியல் மீடியாவை ஒழிக்க வேண்டும் என சிலர் வெளிப்படையாகவே புலம்புகின்றனர்.

அப்படித்தான் சில யூடியுப் பிரபலங்கள் அக்கப்போர் செய்து வருகின்றனர். அதில் திவ்யா கள்ளச்சி திருச்சி சாதனா என சிலர் வரம்பு மீறி சேட்டை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு எல்லாமே கன்டென்ட் தான். தற்போது இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில் நாம் எதிர்பார்க்காத இன்னும் பலரின் பெயரும் அடிபடுகிறது. மேற்கண்ட நபர்கள் சிறுவர்களை கூட விட்டு வைக்காமல் செய்த அட்டூழியமும் அம்பலமாகி இருக்கிறது.

விரைவில் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அதே சமயம் கோமாளிகள் போல் வீடியோ போடும் இவர்களின் கொடூர முகம் அதிர்ச்சியையும் கொடுக்கிறது.

பணம் ஆடம்பரம் சொகுசு வாழ்க்கை இவற்றிற்காக மட்டுமே இவை அனைத்தும் நடக்கிறது. எப்போது யூடியூப் காசு கொடுப்பதை நிறுத்துகிறதோ அப்போதுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.

அதே போல் சமையல், ஆன்மீகம், கல்வி சம்பந்தப்பட்ட சேனல்கள் தவிர அனைத்தையும் முடக்க வேண்டும். உழைக்காமல் ஆடி பாடி சம்பாதிப்பவர்களை எதற்காக ஊக்குவிக்க வேண்டும்.

பொழுது போக்காக இருக்க வேண்டியது தற்போது முழு நேர வேலையாக மாறிவிட்டது. இதை பார்க்கும் குழந்தைகள் தேவையில்லாத வார்த்தை பேசுவதில் தொடங்கி பல விஷயங்களை செய்கின்றனர்

இது நிச்சயம் கலாச்சார அழிவுதான். அதனால் அரசு இதை உடனடியாக கவனிக்க வேண்டும். உண்மையில் இந்த களைகள் அகற்றப்பட்டால் தான் வருங்காலம் தப்பிக்கும்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.