புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உலகத்தையே மிரட்டிய கங்குவாவின் கிராபிக்ஸ் வேலை.. போட்ட காசுக்காக இதுவரை சினிமா பார்க்காததை செய்யும் சிவா டீம்

Kanguva : தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம்தான் சூர்யாவின் கங்குவா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இதுவே பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அந்த அளவுக்கு டீசரிலேயே தெறிக்க விட்டிருந்தார் சிறுத்தை சிவா. மேலும் இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது.

சூர்யாவின் படங்களிலேயே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி வருவது கங்குவா தான். 17 ஆம் நூற்றாண்டு கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

கங்குவா படத்தில் சிறுத்தை சிவனின் பிரம்மாண்டம்

மேலும் கங்குவா டீசரில் விஎஃப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி பிரம்மாண்டமாக இருந்தது. இப்போது போட்ட காசுக்காக இதுவரை சினிமா பார்க்காததை சிறுத்தை சிவா செய்ய உள்ளார்.

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் ஐந்து மொழிகளில் வெளியாவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கங்குவா படம் கிட்டத்தட்ட 35 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதில் 11 இந்திய மொழிகள் ஆகும்.

இது தவிர படத்தின் ப்ரமோஷனுக்கு பல திட்டங்களை வைத்துள்ளனர். குறிப்பாக சவுத் கொரியா, ஐரோப்பா, யுஎஸ் போன்ற இடங்களுக்கு செல்ல உள்ளனராம். மேலும் கங்குவா ப்ரோமோஷனுக்கு மிகப்பெரிய இயக்குனர்கள் மற்றும் உச்ச நட்சத்திரங்களை அழைக்க இருக்கின்றனர்.

Trending News