திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆன்மீகவாதிகளின் ஆணவத்தின் உச்சம்.. இளையராஜாவைப் பின்பற்றி பெயரைக் கெடுத்துக் கொள்ளும் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதையும் தாண்டி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளவர். வருடத்திற்கு ஒருமுறை இமயமலைக்கு சென்று அங்குள்ள பாபாவை தரிசனம் செய்வது, வீடு முதல் அலுவலகம் வரை ராகவேந்திரா சாமியின் புகைப்படங்களை வைத்து வணங்குதல் உள்ளிட்ட தனது ஒவ்வொரு அசைவிலும் கடவுளை முதலில் முன்னிறுத்துபவர்.

விழா மேடைகளில் இவரது பொறுமையான, ஸ்டைலான பேச்சை கேட்கவே ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடுவர். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஓர் விழா மேடையில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த், தான் அதிக குடிப்பழக்கத்தில் திருமணம் முன்பு வரை இருந்ததாகவும, அசைவ உணவுகளை விரும்பி தினமும் உண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

Also Read: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசி ஹிந்தி படம்.. படையப்பா பாணியில் ஹாட்ரிக் வெற்றி

ஆனால் தனது மனைவி லதாவை திருமணம் செய்ததற்கு பின்பு அவரால் தான் இந்த இரண்டு பழக்கங்களையும் விட்டுவிட்டேன் என தெரிவித்தார். மேலும் பேசிய ரஜினிகாந்த், தனது படங்களையும், குரலையும் வணிக ரீதியாக பயன்படுத்துவோர் கட்டாயம் தனக்கு பணம் தரவேண்டும் என மறைமுகமாக தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு வைரலாகிய நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவும் அண்மைக் காலமாக தனது பாடல்களை யார் மேடையேறி பாடினாலும் அதற்கு பணமும், தனது அனுமதியும் பெறவேண்டும் என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.இளையராஜாவிற்கு பட வாய்ப்புகளே இல்லாத அச்சமயத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி இளையராஜாவிற்கு உதவினார்.

Also Read:அப்பா, மகனாக நடித்து அதிரிபுதிரி ஹிட்டான 5 படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக பின்னிய சிவாஜி

அவரையே மேடைகளில் பாடல்களை பாட வேண்டும் என்றால் தனது சம்மதம் பெற வேண்டும் என பேசினார். இளையாராஜா இவ்வாறு பேசுவது அவரது காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாகவும், இது ஆணவத்தின் ஊக்கம் என்றும் பலரும் அவரை விமர்சித்தனர். இளையராஜாவும், ரஜினிகாந்தும் தமிழகத்தில் மிக பெரிய தூண்களாகும். இவரகளது 80 காலக்கட்டத்தில் ரஜினியின் படங்களில் இளையராஜா இசையமைத்த பாடல் தான் பட்டிதொட்டியெங்கும் வைரலானது.

மக்களால் இவர்கள் இருவரும் இன்று வளர்ந்துள்ள நிலையில், அவர்களை வைத்தே இதுபோன்று சம்பாதிக்க நினைப்பது கொஞ்சம் கூட சரியானது அல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆன்மீகவாதிகளாக இருவரும் இருந்தும் பணத்தின் மீது மட்டுமே குறியாக உள்ளனர் என இவர்களது ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இளையராஜா பாணியில் ரஜினிகாந்த் தனது பெயரை கெடுத்துக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: இளையராஜா இல்லாமல் ஹிட் கொடுத்த 5 இயக்குனர்கள்.. சுத்தமாகவே கண்டு கொள்ளாத ஷங்கர்

 

Trending News