முதல் படமே படுதோல்வி.. மாமனாரின் சொத்தை அளித்த வாரிசு நடிகர்

Gossip: வாரிசு நடிகரின் ஆதிக்கம் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இருந்து தான் வருகிறது. ஆனால் அவர்கள் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் திறமையும் அதிர்ஷ்டமும் இருந்தால் தான் முடியும்.

அந்த வகையில் எண்பதுகளில் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை பிடித்த நடிகர் தனது மகன்களை சினிமாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஒரு மகனை அறிமுகம் செய்து அதில் சில காட்சிகளிலும் நடிகர் நடித்திருந்தார்.

அந்த படம் பெரிய ஹிட் ஆனது. ஆனால் திடீரென நடிகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நடிகரின் மூத்த வாரிசு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

வாரிசு நடிகரின் முதல் படமே படுதோல்வி

ஒரு வழியாக இப்போது தான் திருந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இளைய வாரிசும் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என்று நினைத்தார். இந்நிலையில் அவரது மாமனார் தயாரித்த படத்தில் நடித்தார்.

அதில் கதாநாயகியாக பிரபல இயக்குனரின் மகளும் நடித்திருந்தார். ஆனால் படம் வந்ததே தெரியாத அளவுக்கு தான் இருந்தது. போட்ட பட்ஜெட்டில் கால்வாசி பணத்தை கூட எடுக்கவில்லை.

இதனால் வாரிசு நடிகரின் மாமனார் கடுப்பாகி கண்டபடி திட்டி விட்டாராம். மேலும் அவருடைய மகளிடமும் இனிமே உன்னுடைய புருஷனை படங்களில் நடிக்க சொல்லி விடாதே. தயாரிப்பாளர் தலையில் துண்டை தான் போட வேண்டும் என்று காண்டாகி உள்ளார்.

Leave a Comment