வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்யா கால வாரிவிட்டு முதுகில் குத்திய வாரிசு.. ராதிகாவுக்கு தெரியாமல் போட்ட பிளானில் சாதித்து காட்டிய கோபி

bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு தற்போது தான் பெருமூச்சு விட்டு நிம்மதியாக நிற்கிறார். ஆனாலும் ஹோட்டல் ஓபன் பண்ணிய நிலையில் சமையல் செய்வதற்கும் சரி அங்கே சாப்பிடுவதற்கும் யாரும் வராமல் என்ன பண்ணுவது என்று குழப்பத்திலேயே இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் எனக்கு டான்ஸ் கிளாஸ் போக வேண்டும் என்று பாக்யாவிடம் அடம் பிடித்து கேட்கிறார். ஆனால் பாக்கியா, தற்போது முடியாது ஏற்கனவே ஏகப்பட்ட செலவுகள் இருக்கிறது என்று சொல்லி விட்டார். உடனே இனியா, யாரிடம் சொன்னால் தனக்கு சாதகமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு கோபிக்கு போன் பண்ணி விட்டார்.

போன் பண்ணி என்னுடைய டான்ஸ் இனி அவ்வளவுதான் அம்மா டான்ஸ் பீஸ் கட்ட மாட்டேன் முடியாது என்று சொல்லிவிட்டார் என அப்படியே போட்டு கொடுக்கிறார். உடனே கோபி, உங்க அம்மா முடியலன்னா அப்படியே கேட்டுடனுமா என்ன. நான் எதற்காக இருக்கிறேன் நீ என்னுடன் வா என்று டான்ஸ் ஸ்டுடியோக்கு கூட்டிட்டு போகிறார்.

அங்கே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டர் இடம் பேசி இனியாவை டான்சில் சேர்த்து விட்டார். உடனே இந்த இனியா நடந்த விஷயத்தையும், அம்மா பட்ட கஷ்டத்தையும் ஒரு நொடியில் மறந்து விட்டு சுயநலமாக யோசித்து கோபியை பார்த்து நீங்கள் தான் எனக்கு சிறந்த அப்பா என்று பெருமையுடன் பேசுகிறார். இதைக் கேட்டு கோபி ரொம்பவே பூரித்துப் போய் நான் சாதித்து விட்டேன் என்று நிற்கிறார்.

ஆனாலும் இந்த இனியா ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது சரியான நேரத்தில் காப்பாற்றியது பாக்கிய தான். அப்படி இருக்கும் பொழுது எல்லாத்தையும் மறந்து விட்டு பாக்கியா வேண்டாம் என சொல்லியும் அப்பா பக்கம் சாய்ந்து பாக்கியாவின் முதுகில் குத்தி விட்டார். இதே மாதிரி செழியனும் சுயநலத்துடன் சுற்றி வருகிறார். தற்போது எழிலுக்கும் கோபி வலை விரித்து இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் பிள்ளைகளை நம்பி அவங்களுக்காகவே வாழ்க்கை தொலைத்து போராடிக் கொண்டு வரும் பாக்யாவிற்கு கடைசியில் ஏமாற்றம்தான் என்று சொல்வதற்கு ஏற்ப சில விஷயங்கள் நடந்து கொண்டு வருகிறது. இதற்கு பேசாமல் ஈஸ்வரி சொன்னது போல் இனி யாரையும் நம்பாமல் உன்னுடைய வாழ்க்கையை உன் சந்தோஷத்தை மட்டும் யோசி என்று சொன்னது தான் சரியாக இருக்கும்.

கடைசியில் கோபி போட்ட பிளான் படி பாக்யா தொழில் ரீதியாகவும், குடும்பத்திலும், சிரமப்பட்டு சிக்கி தவிக்கப் போகிறார். ஆனால் இது எதுவும் தெரியாத ராதிகா, கோபியை மலைபோல் நம்பிக் கொண்டு இருக்கிறார். கடைசியில் ஹோட்டல் பிரச்சினைக்கு கோபி தான் காரணம் என்று தெரிய வரும் போது நிச்சியம் ராதிகா அதிரடி முடிவை எடுப்பார்.

Trending News