புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கட்சி மாறிய வாரிசு.. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூடு பிடிக்கும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா விரும்பிய காரணத்தினால் பாரதி அவருக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். இருப்பினும் இரண்டு மகள்களை வார இறுதி நாட்களில் பாரதி சென்ற பார்க்க நீதிபதி அவருக்கு அனுமதி கொடுத்துள்ளார்.

இதனால் இந்த வாரம் இரண்டு மகள்களை வெளியில் அழைத்துச் செல்ல விரும்பிய பாரதி அதற்காக கண்ணம்மா வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது பாரதியிடம் வளர்ந்த ஹேமா அவருடன் செல்ல விரும்புவதில்லை.

Also Read: திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

ஆனால் லட்சுமி மட்டும் அப்பாவுடன் ஜாலியாக வெளியே செல்ல வேண்டும் என புது ஹேர்ஸ்டைல் மற்றும் கெட்டப்புடன் கிளம்பி நிற்கிறார். இதை பார்த்த கண்ணம்மா அதிர்ச்சியாக உறைந்து போய் நிற்கிறார்.

அதுமட்டுமின்றி பாரதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் தயாராகிவிட்டார். இதற்காக பத்திரிக்கை அடித்து கண்ணம்மாவிடம் கொடுத்திருக்கும் பாரதி, விரைவில் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் 2வது கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டுகிறார்.

Also Read: விஜய் டிவியை ஒழித்துக்கட்ட சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 1000 எபிசோட் கடந்த இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

அத்துடன் இவ்வளவு நாள் தன்னுடைய பேச்சு கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி இப்போது அப்பாவின் குழந்தையாக மாறிவிட்டாரே என கண்ணம்மா திகைத்து நிற்கிறார். பின் லட்சுமி-பாரதி காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இவர்கள் இருவரும் அடுத்தடுத்து பயங்கர தில்லாலங்கடி வேலை எல்லாம் பார்க்கப் போகின்றனர்.

இதனாலையே இனிவரும் நாட்களில் பாரதிகண்ணம்மா சீரியல் சூடுபிடிக்கப் போகிறது. அத்துடன் பல மாதங்களாக டிஆர்பி-யில் பின்னடைவை சந்திக்கும் பாரதிகண்ணம்மா சீரியல், இப்போதுதான் ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு சீரியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

Trending News