செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.. தொடர் தோல்வியால் கதறிய நடிகையை அரவணைத்த ஹீரோ

Gossip: வாரிசு நடிகை நடிக்க வந்த சமயத்தில் தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்த அவருக்கு இப்போது எங்கு திரும்பினாலும் தோல்வி முகம் தான் கிடைக்கிறது.

அதிலும் சமீபத்தில் வெளிவந்த படத்துக்காக அவர் விழுந்து விழுந்து பிரமோஷன் செய்தார். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. சமீப காலமாகவே நடிகை கதையின் நாயகியாக நடித்து ஸ்கோர் செய்ய முயற்சித்து வருகிறார்.

நம்பர் நடிகை, எவர்கிரீன் நடிகை இந்த முயற்சியில் இருக்க வாரிசு நடிகையும் அதையே பாலோ செய்து வருகிறார் ஆனால் பாவம் அவருக்கு இந்த முயற்சி ஒர்க் அவுட் ஆகவில்லை. இருந்தாலும் தற்போது நடித்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தார்.

நடிகைக்கு ஆறுதல் சொன்ன ஹீரோ

வழக்கம்போல படம் பின்னடைவை சந்தித்ததில் நடிகை ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம். பெரிய ஹீரோவுக்கு இவர் ரொம்பவும் நெருக்கம் என்பதால் அவரிடம் இதை சொல்லி புலம்பி இருக்கிறார்.

நடிகரோ அடுத்த படத்தில் கவனத்தை செலுத்து. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என அரவணைத்து ஆறுதல் சொல்லியதாக அதிர்ச்சி தகவல்கள் கிளம்பியுள்ளது.

ஏற்கனவே இருவரை பற்றியும் காத்து வாக்கில் ஏகப்பட்ட செய்திகள் பரவி வருகிறது. இதனால் நடிகரின் குடும்பத்திலும் பிரச்சனையாக உள்ளது. இதில் இந்த செய்தியும் கோடம்பாக்கத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.

படம் மொக்கை வாங்கியதால் அப்செட்டான நடிகை

Trending News