வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போன ஹீரோ.. 15 படங்கள் நடித்தும் ஒரே ஒரு ஹிட் படம்

பிரபல நடிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் 15 படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார். அதில் ஒரே ஒரு படம் தான் பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பின்பு அந்த நடிகர் படங்கள் எதுவும் சரிவர போகவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய பெயர் இருக்கிறது.

இதற்குக் காரணம் அவருடைய பின்புலம் தான். முழுக்க முழுக்க காமெடி படங்களில் நடித்து வந்த அந்த ஹீரோ இப்போதுதான் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்போது முழுவதுமாக சினிமாவிற்கு முழுக்க போட உள்ளாராம்.

Also Read : கமலை நிராகரித்த உதயநிதி.. பிரபல நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆண்டவர்

அதாவது உதயநிதி ஸ்டாலின் தான் நடித்த 15 படங்களில் ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்துள்ளார். சந்தானத்துடன் அவருடைய அறிமுகப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தான் கமர்சியல் ஹிட் அடித்தது. அதன் பின்பு அவரது நடிப்பில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் போகவில்லை.

கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் படத்தின் வசூல் போஸ்டர் ஒட்டிய செலவு கூட வரவில்லை என பேசப்பட்டது. இப்படி உதயநிதி தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் அவர் நினைத்ததை சாதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : ஊர் ஊராக அலையவிடுறாங்க.. உதயநிதியிடம் முதல் கோரிக்கை வைத்த சங்க தலைவர் விஷால்

அதாவது சினிமாவால் தனக்கான முகவரியை தேடிக் கொண்டு அதன் பின்பு மக்களை சென்றடைந்து அரசியலில் வரவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். அதேபோல் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அவர் நினைத்தது ஒரு வகையில் நிறைவேறியது.

அதுமட்டுமின்றி சினிமாவில் ஒரு நடிகராக உதயநிதியால் ஜொலிக்க முடியவில்லை என்றாலும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை இவர்தான் விநியோகம் செய்து லாபம் பார்த்து வருகிறார்.

Also Read : புத்திசாலித்தனமாக பின்வாங்கிய உதயநிதி.. டிசம்பர் 24 பதிலடி கொடுக்க நாள் குறித்த கமல்

Trending News