ஹீரோவாக பிரதீப்பிற்கு குவியும் பட வாய்ப்பு.. சம்பளத்தை கேட்டு பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடிய தயாரிப்பாளர்

ஒரே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற நடிகர்களின் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் தான் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கோடி கணக்கில் வசூல் லாபம் பார்த்து வருகிறது.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போல் தற்போது லவ் டுடே திரைப்படத்திற்கும் கிடைத்து வருகிறது. அதனாலயே தற்போது இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் பிரதீப்பை தேடி ஹீரோ வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

Also read: பட வெற்றிக்காக பரிசளித்த காரை வாங்க மறுத்த லவ் டுடே பிரதீப்.. அதற்கு ஈடாக கேட்ட விஷயம்

மேலும் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக பல பெரிய ஹீரோக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இவரின் ஒரே டார்கெட் விஜய் தான். ஏற்கனவே பிரதீப் விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார். ஆனால் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் பிரதீப் படத்தில் நடிப்பதற்கு ஒன்றை வருடங்களுக்கு மேல் ஆகும்.

அந்த இடைவேளையில் பிரதீப் ஹீரோவாக சில திரைப்படங்களில் களமிறங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி தன்னை தேடி வரும் வாய்ப்புகளில் நடிக்க சம்மதிக்கும் பிரதீப் அதற்காக எக்கச்சக்கமாக சம்பளத்தை கேட்கிறாராம். இதனால் அதிர்ந்து போன பல தயாரிப்பாளர்களும் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் பிரதிப்பை வைத்து படம் எடுக்க சம்மதித்திருக்கிறார்.

Also read: 20வது நாளில் லவ் டுடே செய்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை.. ஏஜிஎஸ் நிறுவனத்தை மீண்டும் தலை நிமிர்த்தி விட்ட பிரதீப்

தயாரிப்பாளர்களிடம் சம்பளமாக ஐந்து விரல்களை காட்டும் பிரதீப் தற்போது நடிகர் விஜய்யின் மேனேஜர் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது முடிந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் சில கதைகளையும் பிரதீப் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால் இவர் சம்பள விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வந்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவரை தேடி வரும் என்கிறது திரையுலக வட்டாரம். ஆனாலும் பிரதீப் லவ் டுடே பட வெற்றியால் கொஞ்சம் ஆணவத்துடன் நடந்து கொள்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்