புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினி, கமலையே ஓரம் கட்டிய ஹீரோ.. 90களில் பட்டையை கிளப்பிய வெள்ளி விழா நாயகன்

சிவாஜி, எம்ஜிஆர்யை தொடர்ந்து சினிமாவில் டாப் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் ரஜினி மற்றும் கமல் தான். இப்போது அந்த இடத்தை விஜய் மற்றும் அஜித் பிடித்துள்ளார்கள். தொடர்ந்து இதே இடத்திற்காக தற்போது இளம் நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் வளர்ந்து கொண்டிருக்கும் போது அடுத்த தலைமுறையான சில நடிகர்கள் வந்திருந்தனர். அதாவது பிரபு, மோகன், கார்த்திக், சத்யராஜ், ராமராஜன் போன்ற நடிகர்கள் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வந்தனர்.

Also Read : ரஜினி பெயரை கெடுக்க வந்த வாரிசு.. தெரியாமல் மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

அந்தச் சமயத்தில் ரஜினி மற்றும் கமலை ஓரம் கட்டும் அளவிற்கு ஒரு ஹீரோ பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களின் கனவு நாயகனாகவும் அவர் வளம் வந்தார். அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை நவரச நாயகன் கார்த்திக் தான். 90களில் பல ஹிட் படங்களை கார்த்திக் கொடுத்துள்ளார்.

கிழக்கு வாசல், பெரிய வீட்டு பண்ணைக்காரன், வருஷம் 16 என பல வெள்ளி விழா படங்களை கார்த்திக் கொடுத்துள்ளார். அதன் பிறகு நடுவில் சினிமாவில் அவரால் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் அவரால் இடம்பெற முடியவில்லை.

Also Read : கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுக்கும் ரஜினி.. ரோலக்ஸ் செய்யப் போகும் சம்பவம்

மேலும் ஆக்சன் படங்களை தாண்டி காமெடி படங்களிலும் கார்த்திக் பின்னி பெடல் எடுப்பார். சமீபத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள கார்த்திக் தற்போது படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். இவருடைய இந்த புது அவதாரமும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

ஆனால் கார்த்திக்கு காலில் பிரச்சனை இருப்பதால் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் நிற்க முடியாது. இதற்கான சிகிச்சையை தற்போது மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதிலிருந்து கார்த்திக் பூரண குணம் பெற்று மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Also Read : ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயின்.. 46 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

Trending News