வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய் பட ஹீரோயினை டார்கெட் செய்யும் ஹீரோ.. செண்டிமெண்டாக மூன்று படமும் செம ஹிட்

சினிமாவை பொறுத்தவரை ஈஸியாக ஃபேமஸ் ஆகிவிட வேண்டும் என்றால் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து விட்டாலே போதும். அவர்கள் தானாகவே மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆகி விடுவார்கள். அதிலும் அதிக அளவில் ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் படம் என்றால் சொல்லவா செய்ய வேண்டும்.

அப்படித்தான் விஜய்யின் படத்தில் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு நடிப்பதற்கு நடிகைகள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்யுடன் நடித்த நடிகைகளை வைத்தே டார்கெட் செய்கிறார் ஒரு ஹீரோ. அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் செண்டிமெண்ட் தான்.

Also read: புளியங்கொம்புல இருந்து முருங்க கொம்புக்கு வந்த தோனி.. விஜய்யை நம்பி மொக்கை வாங்கிய தல

விஜய் பட ஹீரோயின் நடித்தால் செண்டிமெண்டாக எல்லா படமும் ஹிட் ஆகிடும் என்ற எண்ணத்தில் தான். ஆனாலும் இதுவரை அவருக்கு ஒர்க் அவுட் ஆகி கொண்டு இருக்கிறது. அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் இவரை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு வந்துவிட்டார். அந்த ஹீரோ வேறு யாருமில்லை இளம் வயது பெண்களை கவர்ந்து வரும் கவின் தான்.

அந்த வரிசையில் விஜய் கூட பிகில் படத்தில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் கவின் கூட ஆகாஷ் வாணி என்ற வெப் தொடரில் ஹீரோயினாக நடித்திருப்பார். அதன் பிறகு மறுபடியும் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் மெயின் ஹீரோயினாக லிப்ட் படத்தில் நடித்திருப்பார்.

Also read: தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாகும் ஆறடி நடிகை.. விஜய் டிவி நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும் வெங்கட் பிரபு

அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். இவரையும் கவின் தேடி பிடித்து டாடா படத்தில் நடிக்க வைத்திருப்பார். இந்தப் படமும் செம சூப்பர் ஹிட் ஆகி கவின் மற்றும் அபர்ணா தாஸ் இவர்கள் இருவருக்குமே அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

அத்துடன் கவின் இதை சென்டிமென்ட் ஆகவும் பார்க்க ஆரம்பித்து விட்டார். ஆனாலும் இது ஒரு விதத்தில் சரியாகத்தான் இருக்கு என்று தோன்றுகிறது. இது கடைசி வரை அவரால் கடைபிடிக்க முடியுமா அல்லது அடுத்த படங்களிலும் இந்த செண்டிமெண்ட் தொடருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஒருவேளை அடுத்த படத்தில் விஜய் பட நடிகை நடிக்கவில்லை என்றால் கவின் அவ்வளவு தானா எப்படி அமையப்போகிறது என்று பார்க்கலாம்.

Also read: 3 ஹீரோக்களின் இடத்தை பிடிக்கும் கவின்.. ஒரே ஹிட்டால் புரட்டிப்போட்ட சினிமா கேரியர்

Trending News