நம்பி வந்த நடிகருக்கு அல்வா கொடுத்த இயக்குனர்.. நமக்கும் அந்த நிலைமை தானா, தவிக்கும் ஹீரோ

Gossip: அந்த இயக்குனர் தொடர்ந்து பெரிய ஹீரோக்களை பிடித்து முன்னணி அந்தஸ்தை பெற்றார். ஆனால் மாஸ் நடிகரை வைத்து எடுத்த படம் அவருக்கே ஆப்பாக முடிந்தது.

கதை பிரச்சனையில் சிக்கிய அவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அந்த இயக்குனருக்கு கட்டுமஸ்தான நடிகர் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

அந்த படமும் சமீபத்தில் வெளியானது. ஏகப்பட்ட பிரமோஷன் கூட நடந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

நம்பி வந்த நடிகருக்கு அல்வா கொடுத்த இயக்குனர்

இயக்குனரை நம்பிய நடிகருக்கு தட்டு நிறைய அல்வா கிடைத்தது தான் மிச்சம். இதை பார்த்து அரண்டு போய் இருக்கிறாராம் திடீர் புகழ்பெற்ற நடிகர்.

இந்த ஹீரோ கடைசியாக நடித்த படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதை அடுத்து இவருடைய மார்க்கெட் வேற லெவலில் இருக்கிறது. தற்போது இவர் நடித்து வரும் படம் கூட பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அந்த இயக்குனரின் ஊர் படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறுமா என்ற சந்தேகம் நடிகருக்கே வந்து விட்டதாம்.

அதனால் பெரிய படம் வெளியான பிறகு இந்த படம் வெளியாகட்டும் என அமைதியாக இருக்கிறாராம். இல்லை என்றால் இந்த படம் சொதப்பி அடுத்த படத்தையும் காலி செய்துவிடும் என்ற பயம்தான்.

ஆனால் அந்த அரசியல் படம் அடுத்த வருடம் தான் ரிலீஸ் ஆகப்போகிறது. இதனால் என்ன செய்வது என ஊர் படத்தின் தயாரிப்பாளர் யோசித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்