திறமை இருந்தும் சினிமாவில் தொடர்ந்து கள்ளக்காதல் கதையை தேர்வு செய்ததால் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் ஐட்டம் நடிகை ஒருவர் பரிதவிக்கிறார். 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தை தொழிலாளர்கள், இளையோர் பிரச்சனை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி சமூகத்தில் நிலவும் சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டு ஒரு காதல் திரைப்படமாக வழக்கு எண் 18/ 9 படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மனிஷா யாதவ்.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சமுதாயத்தில் நடக்கும் சர்ச்சையான படங்களில் நடிப்பார். அதனால் இவருக்கு அனைத்து படங்களுமே கள்ளக்காதல், பள்ளி படிக்கும் மாணவிக்கு ஏற்படும் காதல் இப்படிப்பட்ட கதைகளை இவருக்கு வந்தது. இப்படி இருக்க ஒரு படத்தில் நடிக்க பிரபல இயக்குனரால் அழைக்கப்பட்டார் பின் படம் பிடிக்காமல் விலகினார்.
Also Read: 41 வயது வரை காதல் என்ற பெயரில் நடிகையை ஏமாற்றிய பிரபலம்.. கழட்டிவிட்டு கல்யாணம் செய்யும் அவலம்
இதில் மனிஷா யாதவ் ஒரு விவசாய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்பு துவங்கியவுடன் பிரபல இயக்குனருக்கு மனிஷா யாதவ்வின் நடிப்பு பிடிக்காமல் போனதால் அவருக்கு பதில் நந்திதா நடிக்க ஆரம்பித்தார். ஆனால் நடந்த உண்மையை மறைத்து படத்திலிருந்து விலகியதற்காக வேறு ஒரு காரணத்தை சொல்லி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.
அந்த படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம் என்று நடிகையிடம் கேட்டபோது படத்தின் இயக்குனர் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூப்பிட்டால் எனக்கு பிடிக்காமல் வந்துவிட்டேன் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
Also Read: 18 வயதில் படுக்கையறை காட்சியில் நடித்த நடிகை.. கேள்விக்குறியான சினிமா வாழ்க்கை
இதைப்பற்றி இயக்குனரிடம் கேட்ட பொழுது அவர், மனிஷா யாதவ் விஷ்ணு விஷால் உடன் நடிக்க மாட்டேன் விஜய் சேதுபதி மட்டுமே நடிப்பேன் என்று விலகி விட்டார் இதுதான் காரணம் என்று உடைத்துக் கூறினார். மேலும் அந்த இயக்குனர் கதைக்கு ஏற்ற கதாநாயகி மட்டுமே தேர்ந்தெடுப்பார். அவர் மீது இந்த புகார் வராது இவர் பொய்யாக கூறி இருக்கிறார்.