வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லிப் லாக் காட்சிக்கு பின் வாயை டெட்டாலால் கழுவியை ஹீரோயின்.. தமன்னா கூட்டாளி செய்த அருவருப்பான செயல்

Tamannaah Partner: ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் சீரிஸ் ஏற்கனவே பல சர்ச்சைகளுடன் வெளியானது. இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் டீசர் வேற வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதில் படுக்கையறை காட்சிகளும் லிப்லாக் காட்சிகளும் அசால்டாக காட்டப்படுவதால் இந்த படத்திற்கு எதிராக ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது.

இதில் நடிகை தமன்னா, காஜல், மிருணாள் தாகூர் போன்ற முன்னணி ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் மூத்த நடிகை நீனா குப்தா-வும்  நடித்திருக்கிறார். இவர் 80-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்.

Also Read: பலான காட்சிக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய 3 நடிகைகள்.. எல்லாரையும் ஓரம் கட்டிய தமன்னா

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததும் பிரேக் எடுத்துக் கொண்ட நீனா குப்தா மறுபடியும் 2009 ஆம் ஆண்டு நடிக்க துவங்கினார். இந்த நிலையில் இவர் தற்போது ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற ஆன்டாலாஜியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய திரைப்பயணத்தில் முதல் முதலாக நடித்த லிப்லாக் காட்சிக்குப் பிறகு தன்னுடைய வாயை டெட்டால் போட்டு கழுவியதாக தெரிவித்து பெரும் பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.

இவர் சீரியலில் முதன்முதலாக லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தவராம். அதுதான் சின்னத்திரை சீரியல் வரலாற்றில் முதல் லிப் லாக் காட்சியாம். திலீப் தவான் என்ற நடிகருடன் நீனா குப்தா முதல் முதலாக லிப் லாக் கட்சியில் நடித்து, அதன் பின்னர் இரவு டெட்டால் ஊற்றி தன் வாயை கழுவினாராம். திலீப் தன்னுடைய நண்பர் கூட இல்லை, யார் என்று முன்பின் தெரியாதவர் தான்.

Also Read: மகா சிவராத்திரியை கொண்டாடிய நட்சத்திரங்கள்.. பரவச நிலையில் தமன்னா போட்ட ஆட்டம்

அவர் அழகாக இருந்தாலும் முத்தக் காட்சியில் நடிப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் அதில் நடிப்பதற்கு உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் அவர் தயாராகாததால் பதட்டத்துடன் ஒரு வழியாக அந்த சீனை நடித்து முடித்து விட்டாராம். முடித்த கையோடு மிகவும் அருவருப்பாக உணர்ந்ததால் வாயை டெட்டால் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததாகவும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நாளை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகப்போகும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தின் டீசரில் ‘திருமணத்திற்கு முன்னாடி டெஸ்ட்ரைவ் பண்ணனும்னு’ என்ற டயலாக்கை அசால்டாக பேசிய மூத்த நடிகை நீனா குப்தா, லிப்லாக் காட்சியை அருவருப்பாக நினைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என நெட்டிசன்கள் இவருடைய பேட்டியை குறித்து சோசியல் மீடியாவில் பங்கம் செய்கின்றனர்.

Also Read: இணையத்தில் மட்டமான வேலை செய்த கஜோல்.. பட விளம்பரத்திற்காக இப்படியெல்லாமா செய்வீங்க?

Trending News