வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஊசி போட்டு உதடை வீங்க வைத்த ஹீரோயின்.. நடிகைகளை ஆட்டிப்படைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி

Gossip: பெண்களுக்கு இயற்கை அழகு தான் நிரந்தரம். 80, 90 காலகட்டத்தில் இருந்த நடிகைகள் பலரும் இயற்கையான அழகு மட்டுமல்லாமல் கருப்பு நிறத்தோடு ஜெயித்த கதைகள் ஏராளம்.

ஆனால் இப்போதுள்ள நடிகைகள் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் அழகை மேம்படுத்துவதில் தான் குறியாக இருக்கின்றனர். 30 வயதை தாண்டி விட்டாலே அந்த நடிகை தன்னை இளமையாக காட்டிக்கொள்ள கண்ட கண்ட மருத்துவ சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர்.

அப்படித்தான் வாரிசு நடிகை நன்றாக இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சீக்குவந்த கோழி போல் மாறினார். அதேபோல் நம்பர் நடிகையும் உதடு அழகாக தெரிய வேண்டும் என ஊசி போட்டு அதை வீங்க வைத்த கதையும் உண்டு.

நம்பர் நடிகை செய்த சிகிச்சை

இதில் விவாகரத்து நடிகை அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவே கோடிக்கணக்கில் செலவு செய்து காஸ்மெட்டிக் சர்ஜரி செய்கிறாராம். அவரைப்போலவே சின்ன நம்பர் நடிகையும் இப்போது தகதகவென ஜொலிக்க காரணமும் இதுதான்.

அதை வைத்து இப்போது அவர் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் தட்டி தூக்கி வருகிறார். ஆனால் இது போன்ற மருத்துவ சிகிச்சைகள் தவறாக மாறி சில நடிகைகளின் முகத்தை கோரமாக மாற்றி விடுகிறது. சமீபத்தில் வெளியாகி சர்ச்சையான அந்த விலங்கு படத்தில் நடித்த நடிகையும் இப்படித்தான் அழகுக்காக சிகிச்சை செய்தார்.

ஆனால் அது தவறாக போனதில் நடிகையின் முகமே இப்போது பார்க்க சகிக்கவில்லை என பாலிவுட் பக்கத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது. இப்படி சிகிச்சை பின்னால் ஓடும் நடிகைகள் எப்போதுதான் மாறப் போகிறார்களோ தெரியவில்லை.

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நடிகைகள்

Trending News