சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வீட்டுக்கே வராமல் பாரில் பிரபல நடிகையுடன் கூத்தடித்த டாப் ஹீரோ.. மனைவியை பார்த்ததும் பல்டி அடித்த சம்பவம்

கோலிவுட்டில் அசைக்க முடியாத நடிகராக இருக்கும் டாப் ஹீரோ ஒருவர், திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பல நாட்கள் வீட்டுக்கே போகாமல் அந்த நடிகையுடன் பாரில் குடித்துவிட்டு கூத்தடித்தார். இவர்களது அந்தரங்க உறவை பார்த்து திரையுலகமே கை கொட்டி சிரித்தது. 

அதுவும் படத்தின் சூட்டிங் முடிந்த பின்பு அந்த நடிகையுடன் ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இது எப்படியோ ஹீரோவின் மனைவிக்குத் தெரிந்ததும் பதறி அடித்துக் கொண்டு அவரும் ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

ஹோட்டல் ஊழியரின் மூலம் சுதாரித்துக் கொண்ட டாப் ஹீரோ, பக்கத்து ரூமில் இருந்த படத்தின் இயக்குனரை தன்னுடைய அறைக்கு வர வைத்து, அவருடன் தான் மது அருந்துவதாக மனைவியை நம்ப வைத்தார். பாவம் அந்த ஹீரோவின் மனைவியும் நம்பிவிட்டார்.

Also Read: தாராள கவர்ச்சி காட்டிய நடிகை.. மார்க்கெட் போகும் பரிதாபம்

நடிகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிந்ததால் அவரை திருமணம் செய்து கொண்டதால், இந்த விஷயத்தை ஹீரோவின் மனைவி கண்டும் காணாமல் விட்டுவிட்டார். ஒரு கட்டத்தில் டாப் ஹீரோவின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இயக்குனர் ஒருவர், நடிகையுடன் இருக்கும் ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணு.

இல்லை என்றால், உன் வளர்ச்சியை அதுவே கெடுத்து விடும் என்று கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லி அறிவுரை வழங்கினார். அதன் பின்பு தான் டாப் ஹீரோ நடிகையை விட்டு விலகினார். அந்த நடிகையும் அதன்பின் அக்கட தேசத்து முன்னணி நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

Trending News