
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் ரோகிணி பற்றிய ரகசியங்கள் எதுவும் வெளிவராமல் ஒவ்வொரு விஷயத்திலும் ரோகினி எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார். அதற்கு பதிலாக முத்துவும் மீனாவும் தான் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கிறார்கள் என்பதால் இந்த நாடகமே பார்ப்பதற்கு வெறுப்பாகிவிட்டது.
அதனால் தான் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளி சின்ன மருமகள் சீரியல் முதல் இடத்தை பெற்று விட்டது. இன்னும் இப்படியே ரோகிணி மாட்டாமல் கதைகள் நகர்ந்து வந்தால் இருக்கும் இடம் தெரியாமலேயே சிறகடிக்கும் ஆசை சீரியல் ஓடிப்போய்விடும். அந்த அளவிற்கு கதைகள் சுவாரஸ்யமாகவே இல்லாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது.
அதிலும் தற்போது எந்த தவறும் செய்யாமல் பரசுராமனின் மகள் கல்யாணத்தில் முத்து அவமானப்பட்டு வருகிறார். அதாவது கையில் சரக்கு பாட்டில் வைத்திருந்ததை பார்த்த மனோஜ், விஜயாவிடம் முத்து குடித்துவிட்டு பிரச்சினை பண்ணப் போகிறான். தேவையில்லாமல் நமக்கு அவமானமாக இருக்கும் அதனால் நாம் இந்த கல்யாணத்தை பார்க்க வேண்டாம், வீட்டிற்கு போகலாம் என்று சொல்கிறார்.
இதே கேட்டதும் விஜயா, அண்ணாமலையிடம் முத்து திருந்தவே மாட்டான். நம்ம வீட்டு பங்க்ஷனா கூட பரவால்ல, ஆனால் இங்கே வந்து உங்க பையன் குடிச்சுபுட்டு பிரச்சனை செய்தால் தேவையில்லாமல் அவமானப்பட வேண்டும் என்று சொல்கிறார். முத்து கையில் சரக்கு பாட்டில் இருந்ததை மனோஜ் பார்த்து தான் சொன்னான் என்று சொல்லியதும் அண்ணாமலையும் நம்பி விடுகிறார்.
உடனே அண்ணாமலை, மீனாவை சந்தித்து உன் புருஷனை கொஞ்சம் கண்காணித்து கொள். ஏனென்றால் அவன் நண்பர்களுடன் குடிப்பதாக கேள்விப்பட்டேன் என்று சொல்லிவிட்டார். இதே கேள்விப்பட்டதும் கோபத்துடன் மீனா முத்துவை தேடி மண்டபத்தில் அலைகிறார், அப்பொழுது ரவியும் சேர்ந்து தேடிப் பார்க்கிறார். இந்த சமயத்தில் முத்து சட்டையில் குடிப்பவர்கள் தெரியாத்தனமாக சரக்கை ஊற்றி விடுகிறார்கள்.
அப்பொழுது முத்து பக்கத்தில் சரக்கு வாசனை வருகிறது என புரிந்து கொண்ட மீனா முத்துவை திட்டி சண்டை போடுகிறார். ரவியும் கூட சேர்ந்து திட்டிய நிலையில் முத்து சொல்வதே மீனா கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்கவே இல்லை. அதன்பிறகு முத்து சட்டையை மாற்றி விட்டு ஊதி காட்டிய நிலையில் தான் மீனா ரவி நம்பி மன்னிப்பு கேட்கிறார்கள். அதாவது எந்த தப்பும் பண்ணாமல் முத்து தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்.
இந்த மீனாவும் கொஞ்சம் கூட முத்துவை புரிந்து கொள்ளாமல் ஓவராக பேசி சண்டை போடுகிறார். ஆனால் தவறுக்கு மேல் தவறு பண்ணி பித்தலாட்டம் செய்து மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வரும் ரோகிணி மட்டும் மனோஜுடன் சந்தோஷமாக இருக்கிறார். இந்த வாரத்திலேயே கசாப்பு கடை மணி யாரு, ரோகிணி எப்படிப்பட்டவர் என்ற உண்மை தெரிந்தால் தான் விட்ட டிஆர்பி ரேட்டிங்கை பிடிக்க முடியும்.