வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

உடைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மனைவியை வெளுத்து வாங்கிய தம்பி!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தை இல்லாமல் தவித்த முல்லைக்கு பாண்டியன் ஸ்டோர் ஸ் குடும்பம் கடன்பட்டு 5 லட்சம் செலவு செய்து செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். ஆனால் அந்த சிகிச்சை பலன் அளிக்காமல் போனதால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கேட்டதால், ஜீவா தன்னுடைய மனைவி மீனாவிடம் இருந்த பணத்தில் வாங்கிய கடனை அடைத்தார்.

இதை மீனாவின் அப்பா பெரிதாக்கி, கதிர்-முல்லை இருவரையும் அவமானப்படுத்தி அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வகையில் செய்துவிட்டனர். இதெல்லாம் மீனாவால் தான் நடந்தது என்பதால் ஜீவா அவளை கண்டபடி திட்டி தீர்க்கிறான். மீனாவின் மகள் கயல் பாப்பாவிற்காக இந்தக் குடும்பமே பார்த்து பார்த்து ஒவ்வொரு நல்ல விஷயமும் செய்தபோது, ஜீவா-முல்லை இருவரும் மட்டுமல்ல இந்தக் குடும்பமே அமைதியாகத்தான் இருந்தது.

ஒரு வார்த்தை கூட கேள்வி கேட்க வில்லை. அப்படி இருக்கும்போது முல்லை-கதிர் இருவருக்காக வாங்கிய கடனுக்கு அவர்களை மட்டுமே குற்றவாளியாக பார்த்து வீட்டைவிட்டு செல்லும் வகையில் மீனா மற்றும் மீனாவின் அப்பா செய்ததால், ஜீவா மனைவியை கிழி கிழின்னு கிழிக்கிறான்.

அவன் தங்களுடைய அறையின் இருந்து பேசினாலும் வெளியில் மூர்த்தி, தனம், கண்ணன், ஐஸ்வர்யா என குடும்பமே அதைக்கேட்டு கதிர்-முல்லையை நினைத்து கலங்குகின்றனர். எனவே மனம் வருத்தம் அடைந்து மூர்த்தி படுத்துக்கொண்டே கதிர் வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்துக் கொண்டு இருக்கும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது.

இதன் பிறகு மூர்த்தி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறும்போது, நிச்சயம் மூர்த்தியை கதிர் பார்க்க வருவான். அதன்பிறகு குடும்பத்தினர் மீண்டும் கதிர்-முல்லை இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூப்பிட்டாலும் முல்லையை மட்டுமே கதிர் அனுப்பி வைத்துவிட்டு அவன் வெளியூருக்கு வேலைதேடி செல்வான்.

அங்கு பணம் சம்பாரித்து முல்லைக்கு வாங்கிய கடனை அடைத்து விட்ட பிறகு, மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் காலடி எடுத்து வைப்பான். ஏனென்றால் மீனாவின் அப்பாவிடம் கதிர் போட்ட சவாலை நிறைவேற்றுவதற்காகவே கதிர் இப்படி ஒரு முடிவை எடுப்பான்.

Trending News