ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சீமான் பற்றி வண்டி வண்டியா அளந்துவிட்ட அண்ணாமலை.. எங்கயோ இடிக்குதே

ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் வருண்குமார் ஐபிஎஸ், ‘நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி’ என்றார். அதற்கு அவரை சீமான் ஒருமையில் பேசினார்.

இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் “வருண்குமார் ஐபிஎஸ் என்னுடைய பேட்ச்மெட்டும் கூட. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தின் முக்கிய நபர். முக்கியமான குரல்.

போலீஸ் அதிகாரியாக இருந்தபோது. நானும் மாநாட்டில் பங்கேற்றிருக்கிறேன். அது மாநில காவல்துறையின் கருத்தாக இருக்காது. அது அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அந்த வீடியோ வெளியே வந்ததுதான் பிரச்சனை.

சீமான் தமிழ் தேசியம். நாங்கள் இந்தியா முழுவதும் தேசிய அரசியல். அப்படித்தான் பார்க்கிறோம். நாம் தமிழர் முக்கியமான கட்சி. அவர்களின் கருத்தும் தேவை.

அது பாஜகவின் கருத்து கிடையாது. அரசின் கருத்தும் கிடையாது. நாம் தமிழர் கட்சி அரசியல் செய்யட்டும். அண்ணன் சீமானை பொருத்தவரை மாறுப்பட்ட கோணம். வேறு வேறு பாதை. இருவரும் தமிழ்நாட்டுக்காகத்தான் இருக்கிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News