திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ரஜினி மீது விஜய்க்கு இருக்கும் மரியாதை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்

Rajini-Vijay: சமீப காலமாகவே விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் ஜெயிலர், லியோ படங்களில் எது அதிக வசூலை பெறும் என்ற கருத்து கணிப்புகளும், விவாதங்களும் தான் சோசியல் மீடியாவில் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் ரஜினி மேல் விஜய்க்கு இருக்கும் மரியாதை பற்றி ஜெயிலர் படத்தின் ஆர்ட் இயக்குனர் கிரண் வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ஜெயிலர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அன்று நெல்சன் தூக்க கலக்கத்திலேயே வந்து சேர்ந்தார்.

Also read: வயித்தெரிச்சலில் கரையும் காக்கா, ஜெயிலருக்கு எதிராக நடக்கும் சதி.. கொடுத்த காசுக்கு மேல கூவும் ப்ளூ சட்டை

என்ன இப்படி வருகிறீர்கள் என்று கேட்டதற்கு விஜய் சார் காலையிலேயே என்னை போன் செய்து எழுப்பிவிட்டார். முதல் நாள் சூட்டிங் சீக்கிரம் போ என்று துரத்தியதால், சீக்கிரமாக வந்துவிட்டேன் என்று நெல்சன் கூறியிருக்கிறார். இதுவே ரஜினிக்கும், விஜய்க்கும் இடையே இருக்கும் பிணைப்பை வெளிப்படையாக காட்டுகிறது.

அது மட்டுமின்றி வாரிசு பட சூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நான் விஜய் சாரை பார்க்க அங்கு சென்றிருந்தேன். அப்போது அவர் என்னிடம் பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் முதலாவதாக பேசிய விஷயமே தலைவர் எப்படி இருக்கிறார் என்பது தான்.

Also read: மொத்த ஸ்டேஜையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த சூப்பர் ஸ்டார்.. ஜெயிலரால் எகிறிய சன் டிவியின் டிஆர்பி

அதற்கு நான் தலைவர் ரொம்பவும் எனர்ஜியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். நெல்சன் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒரே கலகலப்பாக இருக்கிறது என தெரிவித்தேன். அதற்கு விஜய், நெல்சன் எல்லாரையும் தன் பேச்சிலேயே மயக்கிடுவார், அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என விஜய் கூறியதாக கிரண் இப்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களுக்குள் தான் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய சண்டை இருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லாமல் தான் இருக்கின்றனர் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சமீப காலமாக நடந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

Also read: ரஜினியை வைத்து விஜய்க்கு பதிலடி கொடுத்து எஸ்ஏசி.. வந்த வழி மறந்தோம்னா காணாம போயிடுவோம்

Trending News