வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை மயக்கிய இயக்குனர்.. நடிகையாக மாற்றிய சம்பவம்

இன்று எத்தனையோ நடிகைகள் முன்னணி இடத்தை பிடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இந்த நடிகைக்கு ஈடாக இன்னொருவர் வர முடியாது என்னும் அளவுக்கு அனைவரையும் கவர்ந்தவர் தான் இந்த நடிகை. தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை இவருடைய புகழ் பரவி இருக்கிறது.

அவர் வேறு யாரும் அல்ல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கொடிகட்டி பறந்த நடிகை சில்க் ஸ்மிதா தான். இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவருக்கான இடம் மட்டும் திரையுலகில் அப்படியே தான் இருக்கிறது. தன்னுடைய நடன திறமையாலும், போதை ஏற்றும் கண்களாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் நடிகையாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.

Also read:சத்யராஜுடன் நடிக்க மறுத்த சில்க்.. டென்ஷன்சனில் பற்றி ஏறிந்த ஷூட்டிங் ஸ்பாட்

வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவரை திரையுலகிற்கு கொண்டுவந்து சேர்த்த பெருமை நடிகர் வினுசக்கரவர்த்திக்கு மட்டுமே உண்டு. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு இவர் திரை கதையும் எழுதி இருக்கிறார். அந்த வகையில் வண்டி சக்கரம் படத்தில் கிளாமர் பாடலுக்கு ஆட ஒரு நடிகை தேவைப்பட்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் முன்னணி நடிகைகளை ஆட வைக்கலாம் என்று கூற வின்சக்கரவர்த்தி புதுமுக நடிகை தான் வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது அவருடைய வீட்டில் ஒரு பெண் மாவு அரைத்து கொண்டிருந்தாராம். அந்தப் பெண் இவரை பார்த்த பார்வையில் ஒரு காந்தம் இருந்திருக்கிறது. அதில் மயங்கிய அவர் அந்த பெண்ணை பற்றி விசாரித்துள்ளார்.

Also read:சில்க் ஸ்மிதாவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய போராடிய 3 நடிகைகள்.. கவர்ச்சியின் உச்சம் தொட்டும் பலனில்லை

தான் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் தன்னுடைய பெயர் விஜயலட்சுமி என்றும் அவர் கூறியிருக்கிறார். உடனே வினுசக்கரவர்த்தி அந்த பெண்ணிடம் சினிமாவில் நடிக்க விருப்பமா என்று கேட்டு இருக்கிறார். உடனே அவரும் நான் எங்கள் ஊர் திருவிழாக்களில் டான்ஸ் ஆடி இருக்கிறேன், எனக்கு சினிமாவில் நடிக்க பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு அவரை பார்த்த இயக்குனரும், தயாரிப்பாளரும் அசந்து போய் இருக்கின்றனர்.

மேலும் இந்தப் பெண் ஒட்டுமொத்த திரையுலகையும் கலங்கடிக்க போகிறார் என்றும் கூறியிருக்கின்றனர். அதன்பிறகு சில்க் ஸ்மிதாவாக அறிமுகம் ஆகிய விஜயலட்சுமி முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி தன்னுடைய வசீகரத்தால் ரசிகர்களை கவர்ந்தார். இப்படியாக உச்சாணி கொம்பில் இருந்த சில்க் ஸ்மிதா இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Also read:சக்கைபோடு போட்ட 5 பயோபிக் படங்கள்.. சில்க்காய் வாழ்ந்த வித்யா பாலன்

Trending News