சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் முறையாக வெள்ளித்திரையில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் கால்பதிக்க உள்ளார். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயற்றியுள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி யூடியூபில் சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், ரஜினி, அஜீத் போன்ற படங்களின் டிரைலர்களை விட அண்ணாச்சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக செய்திருந்தார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
தற்போது கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தி லெஜண்ட் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். இப்படத்திற்கு சுமார் 30 கோடி முன்பணம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தி லெஜண்ட் படம் 800 திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.
அஜித், விஜய் படங்களுக்கு 800 தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாச்சி படத்துக்கு அசால்டாக இவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஒரு பான் இந்தியப் படமாக தி லெஜண்ட் படம் வெளியாக உள்ளது. அதாவது வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் தி லெஜண்ட் படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
இதனால் அண்ணாச்சி இதுவரை தொழிலில் லெஜண்ட் ஆக இருந்த நிலையில் தற்போது வெள்ளித்திரையிலும் மிகப்பெரிய லெஜண்டாக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் தற்போது ரிலீஸ் தேதி அறிவித்த உடனே தற்போது அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.