சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தூண் போல் அடுத்த படத்துக்கு அண்ணாச்சி போட்ட அஸ்திவாரம் .. அந்தப் பெயர் தான் வேணும் சரவணன் அருள் பிடிக்கும் அடம்

The Legend Saravanan’s upcoming movie update: பல்வேறு உருவ கேலிகளுக்கும் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் மத்தியில் நடித்தே தீருவேன் என்று ஒற்றை காலில் நின்று தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தொழிலதிபர் அருள் சரவணன். “தி லெஜண்ட்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அருள் சரவணன்  இதற்குப்பின் லெஜண்ட் சரவணன் ஆனார்.

வணிக ரீதியாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி தனது ஸ்தாபனத்தை தமிழ்நாட்டின் நம்பர் ஒன் என்ற அளவுக்கு உச்சிக்கு கொண்டு சென்றவர், கலையின் மீது இருக்கும் தனது தீராத தாகத்தால் வயதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தன்னம்பிக்கையின் ஊற்றாக திகழ்கிறார்.

முதலில் தனது நிறுவனத்திற்கு மட்டுமே விளம்பர மாடலாக முன்னணி நடிகைகளுடன் கைகோர்த்த லெஜண்ட் சரவணாவிற்கு நடிப்பின் மீது இருந்த வெறியால் இயக்குனர் ஜேடி ஜெர்ரியுடன் தி லெஜெண்ட் படத்திற்காக கூட்டணி சேர்ந்தார். இதில் கீத்திகா மற்றும் ஊர்வசி என்ற புதுமுக நடிகைகளுடன் நடித்து டிரெண்ட்டிங்கில் இருந்தார்.

Also read: ஜிம் ஒர்க் அவுட் செய்து யூத்தாக மாறிய தி லெஜண்ட் அண்ணாச்சியின் புகைப்படம்.. அடுத்த படத்தின் அவதாரம்!

திலெஜண்ட் திரைப்படம் தோல்வியுற்ற போதும் அடுத்த படத்தில் தரமான கம்பேக் கொடுக்க சிறந்த இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார் சரவணன். இந்நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் ஹிட் கொடுத்த கொடி மற்றும் எதிர்நீச்சல் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் தனது அடுத்த படத்திற்காக கைகோர்த்து உள்ளார்.

சூரி நடிக்கும் கருடன் படத்தில் பிசியாக இருக்கும் துரை செந்தில்குமார், கருடன் படத்திற்கு பின் இப்படத்தை இயக்குவதாக தகவல். சமீபத்தில் சரவணனின் இரண்டாவது படத்திற்க்கான டெஸ்ட் சூட் கோகுலம் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டது. மேலும் படத்தின் ஃப்ரி ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருவதாக கூறியுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாகவும்  நம்பத்தக்க தகவல்கள் வந்துள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து தனது பெயரை அருள் சரவணன் என்பதை  லெஜண்ட் சரவணன் மாற்றி போட சொல்லி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சரவணன். இனிமேல் எல்லாரும் இவரை லெஜண்ட் என்று அழைக்கணும் என்பதே இவரின் அன்பு கட்டளையாம்.

Also read: தி லெஜண்ட் படம் நிகழ்த்திய 5 சாதனை.. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அண்ணாச்சி

Trending News