திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முதல் நாள் சூட்டிங்கில் நடிக்க முடியாமல் பிரிந்த மாரிமுத்துவின் உயிர்.. 200 படத்திற்கு மேல் நடித்த ஹீரோவுக்கு வில்லனாம்

Director Marimuthu: கிட்டத்தட்ட 30 வருட காலங்களாக தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தார் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து. இதற்கு இடைப்பட்ட காலங்களில் எத்தனையோ படங்களில் வில்லனாகவும், இயக்குனராகவும் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னுடைய பயணத்தை பயணித்து வந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட காலங்களில் இவருக்கு கிடைக்காத பேரும் புகழும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்ததின் மூலம் அனைத்து பக்கமும் பிரபலமாகி வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கிறார். அதன் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. அப்படி தான் ஜெயிலர் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

Also read: எதிர்நீச்சல் மாரிமுத்து நடிப்பில் ஜொலித்த 6 படங்கள்.. வருமன் வலதுகரமாக ஜெயிலரில் வந்த பன்னீர்

இதனைத் தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகர் நடிக்க இருக்கும் படத்திலும் இவரைத்தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்பொழுது இவர் நான் வழக்கமாக பண்ணக்கூடிய சீரியலில் டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அதை முடித்துவிட்டு 9 மணிக்கு வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு படக்குழுவும் சரி நீங்கள் அப்பொழுதே வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் 8.30 மணிக்கு இயக்குனர் மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது. இதை கேள்விப்பட்ட தயாரிப்பு நிறுவனம் இன்று நடக்க இருந்த படப்பிடிப்பை நிறுத்தி இருக்கிறார்கள்.

Also read: உயிரை காப்பாற்ற தானே மருத்துவமனைக்கு கார் ஓட்டிய மாரிமுத்து.. கடைசி நிமிடங்களில் நடந்தது இதுதான்

அப்படி இவர் நடிக்க வேண்டிய வில்லன் கேரக்டர் எந்த படத்தில் என்றால் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்த கவுண்டமணி உடன் தான். பல வருடங்களுக்குப் பிறகு கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருந்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் இவருக்கு வில்லனாக குணசேகரனை தான் கூப்பிட்டு இருக்கிறார்கள். இவரும் கவுண்டமணி படம் என்று சொன்னதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் வருகிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அதற்குள் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. தற்போது தான் வெற்றியின் உச்சத்தை தொட்டு படிப்படியாக உயரத்துக்கு வந்து கொண்டிருந்தார். வந்த நேரத்திலேயே இவருடைய நிலைமை இப்படி ஆக வேண்டுமா என்று பலரும் அவர்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

Trending News