திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காகம் பருந்தாக முடியாது.. ரஜினி சொன்ன குட்டி கதை, வெடித்த அடுத்த சர்ச்சை

Actor Rajini: பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் இப்போது சோசியல் மீடியா முழுவதும் நிறைந்திருக்கிறது. அதிலும் ரஜினி சொன்ன குட்டி கதை அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

நேற்று விழா மேடையில் பல சுவாரசியமான விஷயங்களை ரஜினி பேசினார். அதில் பலரையும் கவர்ந்த ஒரு விஷயம் தான் பருந்து, காகம் கதை. அதாவது காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் மற்ற பறவை, விலங்குகளையும் தொந்தரவு செய்யும்.

Also read: அன்று நெல்சனை அவமானப்படுத்திய மீடியா.. இன்று இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ரஜினி, காரணம் இதுதான்

ஆனால் பருந்து அமைதியாக இருக்கும். காகம் வந்து தொந்தரவு செய்தால் கூட வேகமாக உயரே பறந்து விடும். அதேபோன்று காகமும் உயரமாக பறக்க ஆசைப்படும். ஆனால் பறக்க முடியாது, கீழே விழுந்து விடும். அந்த வகையில் மௌனம் தான் சிறந்தது என்று சூப்பர் ஸ்டார் தன் ஸ்டைலில் கூறினார்.

மேலும் இப்பொழுது நான் இந்த கதையை கூறியவுடன் இதில் யார் காகம், யார் பருந்து என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் சோசியல் மீடியாவில் இவரைத்தான் நான் காகம் என்று சொல்கிறேன் என்ற பிரச்சனையும் கிளம்பும். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.

Also read: ஜிவி பிரகாஷ் வேண்டாம் நீங்க வாங்க.. பல வருடங்களுக்குப் பிறகு இணையும் ரெண்டு ராஜாக்கள்

குரைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நம் வேலையை பார்த்தாலே போதும் என்று ரசிகர்களுக்கு சிறு அறிவுரையையும் கூறினார். தற்போது இந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. மேலும் ரஜினி சொன்னது போல் இப்போது விஜய்யை தான் அவர் மறைமுகமாக குத்தி காட்டி பேசியதாகவும் ஒரு தரப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

ஏற்கனவே ஹுக்கும் பாடல் மூலம் நடந்த பிரச்சனையே இன்னும் ஓயாத நிலையில் இந்த பருந்து காகம் கதையும் புது பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எது எப்படி இருந்தாலும் எல்லாமே ஜெயிலர் படத்திற்கு கிடைத்த ப்ரமோஷன் தான் என ரசிகர்கள் அசால்டாக கூறி வருகின்றனர்.

Also read: அந்த ஒரு விஷயம் இல்லனா 100 வயசுக்கு மேலயும் நான் தான் சூப்பர் ஸ்டார்.. தனக்கு தானே சூனியம் வைத்த ரஜினி

Trending News