சாமி நடிகருக்கு கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. எல்லாம் 2வது மனைவியோட ராசி தான்

பெரிய இடத்திலிருந்து சினிமாவில் நுழைந்தாலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஒரு சிறந்த நடிகராக விளங்கினார். அவருடைய போராத காலம் என்று தான் சொல்ல வேண்டும் நடுவில் சொந்த வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனையை சந்தித்தார்.

ஒரு பெரிய இடத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவரது வாழ்க்கையில் புயல் காற்று வீசியது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட மனவேதனையில் குடிக்கு அடிமையானார்.

Also Read : படக் காட்சிக்காக தாலி கட்டிய நடிகர்.. அதீத காதலால் கழட்ட மறுத்த நடிகை

இதைத் தொடர்ந்து வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை இரண்டாவதாக கடவுள் பெயர் கொண்ட இந்த நடிகர் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்த கையோடு நடிகருக்கு கூடையை பிச்சிக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டுகிறது.

இப்போது அவரது சினிமா கேரியர் ஓகோ என்று சென்று கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இரண்டாவது மனைவியின் ராசி தான் என்று சொன்னாலும், இதில் ஒரு சூட்சமம் உள்ளதாம். இந்த நடிகருக்கு வேறு மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பை இரண்டாவது மனைவிதான் பெற்று தந்துள்ளார்.

Also Read : அப்பாவுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யப் போன நடிகை.. இறுதிச் சடங்குக்கு காசு இல்லாமல் தவித்த சோகம்

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கடவுள் நடிகருக்கு கிடைத்துள்ளது. அந்த படத்தின் இயக்குனருக்கு சரியான ஹீரோ கிடைக்காமல் புலம்பி தவித்து உள்ளார். அப்போது அந்த இயக்குனரின் நெருங்கிய தோழியான நடிகரின் இரண்டாவது மனைவியிடம் இந்த விஷயத்தை சொல்லும்போது தனது கணவரையே நடிக்க சொல்கிறேன் என்று கால்ஷீட் வாங்கி கொடுத்துள்ளார்.

அதுவும் அந்த கதைக்கு பக்காவாக இந்த ஹீரோ பொருந்துவதால் இயக்குனருக்கு டபுள் சந்தோஷமாம். தனது மனைவியால் இவ்வளவு பெரிய படத்தில் சுலபமாக வாய்ப்பு கிடைத்தது என்ற சந்தோஷத்தில் அந்த நடிகரும் உள்ளாராம். போற போக்க பார்த்தால் இன்னும் சில வருடங்களில் டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுப்பார் போல இந்த கடவுள் நடிகர்.

Also Read : அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு.. முழுசா அனுபவித்த பின் நடிகையை கழட்டிவிட்ட வாரிசு நடிகர்