Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுசுக்கு எதிராக கேஸ் போட்ட நெட்ஃபிளிக்ஸ்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

தனுசுக்கு எதிராக கேஸ் போட்ட நெட்ஃபிளிக்ஸ்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

Dhanush: கடந்த வருடம் தனுஷ் நயன்தாரா விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம் தான் இதற்கு முக்கிய காரணம். அந்த படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. முன்னதாக அந்த […]

Dhanush: கடந்த வருடம் தனுஷ் நயன்தாரா விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம் தான் இதற்கு முக்கிய காரணம்.

அந்த படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. முன்னதாக அந்த காட்சிகளை பயன்படுத்த அப்பட தயாரிப்பாளரான தனுஷ் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

அதை பொதுவெளியில் அறிக்கை மூலம் தெரிவித்த நயன்தாரா தன்னுடைய வன்மத்தையும் கொட்டி இருந்தார். அதை தொடர்ந்து வெளியான ஆவணப்படத்தில் சில வினாடி காட்சிகள் இருந்தது.

அதனால் தனுஷ் தரப்பில் இருந்து நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தனுசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் தனுஷ் போட்ட கேசை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை அடுத்து தனுஷ் தரப்பு வழக்கறிஞர் அனைத்து காப்புரிமையும் வொண்டர்பார் நிறுவனத்திற்கு சொந்தம் என வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி, தனுஷ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நெட்ஃபிளிக்ஸ் கொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தனுசுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

மேலும் அவர் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இதை தனுஷ் ரசிகர்கள் வெற்றி எங்கள் பக்கம் என நயன்தாராவை வெறுப்பேற்றும் விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.