Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் ஆட்டம் ஒட்டுமொத்தமாக அடங்கும் வகையில் தற்போது தரமான சம்பவம் நடக்க இருக்கிறது. அதாவது தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பதற்கேற்ப ஒவ்வொரு விஷயத்திலும் அட்டூழியம் பண்ணி வருகிறார்.
அந்த வகையில் தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று பலத்த ஏற்பாடுடன் குணசேகரன் உமையாள் கூட்டணி சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் இதை தடுப்பதற்கு ஜனனி டீம் பல வழிகளில் முயற்சி எடுத்தார்கள். அதிலும் கதிர் புத்திசாலித்தனமாக சித்தார்த்தை கடத்தி வைத்து அஞ்சனாவுடன் சேர்த்து வைத்து விடலாம் என்று பிளான் போட்டார்.
ஆனால் அத்தனை பிளானையும் தவிடு பொடியாக்கும் வகையில் கரிகாலனை கைவசம் வைத்துக்கொண்டு ராமசாமி காரியத்தை சாதித்து விட்டார். தற்போது கதிர், சக்தி மற்றும் ஞானம் ஜெயிலில் இருக்கிறார்கள். வழக்கம்போல ஏதாவது ஒரு பிரச்சனையை வரும் பொழுது அதை சமாளிப்பதற்கு ஜீவானந்தம் தான் ஹீரோ மாதிரி என்ட்ரி கொடுப்பார்.
அப்படி அவர் வரும்பொழுது சக்தியை டம்மி ஆக்கிடுவார். அதே மாதிரி இந்த முறை தர்ஷினியை காப்பாற்ற வருவதால் அல்ல கைகளாக இருந்த அந்த மூன்று பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஜீவானந்தம் மாஸ் என்டரி கொடுக்கப் போகிறார்.
குணசேகரனை அடக்க வரும் ஜீவானந்தம்
அதே நேரத்தில் இவர்களுடைய பிளான் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக ஜனனி முக்கியமான மண்டபத்தின் மேனேஜருக்கு கால் பண்ணி பேசி வருகிறார். அப்படி பேசும் பொழுது அந்த நேரத்தில் குணசேகரனின் மாமாவாக இருந்த மதுரை வீரன் ஜனனிக்கு ஒரு குளூ கொடுத்துவிட்டார். இதன் மூலம் ஜனனி குற்றவை டீம் மண்டபத்திற்கு வரப் போகிறார்கள்.
இந்த ஒரு விஷயத்தில் தான் குணசேகரன் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். இதுவரை ஆடிய ஆட்டத்துக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. இதிலிருந்து மீண்டு எழுந்து வர முடியாத அளவிற்கு குணசேகரனுக்கு பெருத்த அடி விழப்போகிறது. அடுத்ததாக நான்கு மருமகள்களும் நினைத்தபடி சொந்தக்காலில் நின்னே முன்னேறிக்கொண்டு ஜெயிக்கப் போகிறார்கள்.