சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தன்னுடைய வீட்டில் லாக்கரில் இருந்த தங்கம் மற்றும் வைர நகை உள்ளிட்ட 60 சவரன் நகை திருடு போனதாக போலீசில் புகார் அளித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மட்டுமல்ல தனுஷ், ரஜினி வீட்டிலும் திருடு நடந்திருக்கலாம் என நாலா பக்கமும் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
போலீசார் ஆறு மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்ற ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி இடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த அதிர்ச்சியான தகவல் பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. இதை வைத்து இப்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களும் கேலி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் இருவரும் இணைந்து நகைகளை திருடியதாக ஒத்துக் கொண்டனர். ஆனால் ட்விஸ்ட் என்னவென்றால் 60 சவரனுக்கு பதில் 100 சவரன் நகையை போலீசார் குற்றவாளிகளிடமிருந்து மீட்டுள்ளனர்.
அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதையாய் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் இருவரும் சேர்ந்து லாக்கரிலிருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. அதுவும் சந்தேகம் வராத அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகை திருடியதையும் ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். இவர்கள் தனுஷ் மற்றும் ரஜினி வீட்டிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களின் வீடுகளிலும் ஏதாவது நகை திருடு போனதா என்றும் விசாரணை நடத்தினார்.
ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலேயே 200 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டறிந்து மறுபடியும் இன்னொரு புகாரை போலீசாரிடம் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக தன்னுடைய தங்கையின் திருமணத்தில் அணிந்திருந்த நகைகளை அடையாளம் காட்ட திருமண போட்டோ ஆல்பத்தை போலீஸிடம் ஒப்படைத்தார்.
இதை அடுத்து புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது போலீசார் 2வது புகாரை தொடர்ந்தே ஈஸ்வரி மற்றும் வெங்கடேஷ் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஈஸ்வரி அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். ‘சம்பளம் குறைவாக தந்ததால் திருடினேன்’ என்று ரஜினியின் மகள் வீட்டின் வேலைக்காரி தெரிவித்துள்ளார்.
அப்படி எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கின்றனர் என விசாரித்தால், மாத சம்பளமாக 35 ஆயிரம் கொடுத்து தங்குவதற்கு இடம், மூன்று வேலை சாப்பாடு போட்டு இருக்கிறார்கள். அப்படியும் ஈஸ்வரிக்கு அதெல்லாம் பத்தாமல் போனது. வசதியாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு நகைகளை திருடியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.