வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புஸ்ஸி ஆனந்தை விஜய் கண்மூடித்தனமாக நம்புவதற்கு முக்கிய காரணம்.. ஆடு பகை குட்டி உறவா?

The main reason why Vijay blindly trusts Pussy Anandh: விஜய் நடிப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வந்தார். அப்படிப்பட்ட இவருக்குள் அரசியல் ஆசையை தூண்டி விட்டது புஸ்ஸி ஆனந்த். இவரை நம்பித்தான் விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார். அந்த அளவிற்கு இவரை முழுவதுமாக நம்புகிறார். அப்படிப்பட்ட புஸ்ஸி ஆனந்த் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

இவருடைய உண்மையான பெயர் ஆனந்த். இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புஸ்ஸி தொகுதியில் 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனார். அதன் பிறகு அந்தத் தொகுதியில் விஜய்யின் ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்தி பல நல்ல திட்டங்களை செய்து வந்திருக்கிறார்கள்.

அப்பொழுது எஸ்.ஏ சந்திரசேகர் புதுச்சேரிக்கு போகும்பொழுது அவருடன் ஏற்பட்ட பழக்கம் மூலம் விஜய்க்கு அறிமுகம் ஆகிருக்கிறார். ஆனால் போகப் போக புஸ்ஸி ஆனந்த் செய்த நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால் எஸ் ஏ சந்திரசேகர் அவரை விட்டு முழுவதுமாக விலகி விட்டார். இது தெரிந்தும் விஜய், புஸ்ஸி ஆனந்தை தொடர்ந்து பக்கத்தில் வைத்து நம்ப ஆரம்பித்து விட்டார்.

Also read: அல்லக்கைகளை நம்பி இறங்காதீங்க விஜய்.. புஸ்ஸி வைத்து தளபதிக்கு K ராஜன் வைத்த கொட்டு – வீடியோ

ஆடு பகை குட்டி உறவு என்பதற்கு ஏற்ப எஸ்ஏ சந்திரசேகர், புஸ்ஸி ஆனந்த் சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கிய நிலையில் விஜய் வம்படியாக அவர்தான் வேணும் என்று அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி தொகுதியில் முதலமைச்சர் ஆக இருக்கும் ரங்கசாமிக்கு ரொம்பவே நெருக்கமானவர். தமிழ்நாட்டின் ADMK கட்சியின் தலைவர்.

ஆனந்த், புஸ்ஸி தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பதால் இவரை வைத்து விஜய் அரசியலில் ஜெயிப்பதற்கு பிளான் பண்ணி இருக்கிறார். ஏனென்றால் இவரும் அவருடைய தொகுதியில் ரத்த தானம் மற்றும் பல நல்ல விஷயங்களை செய்து நல்ல பெயரை எடுத்து இருக்கிறார். அதனால் இவரை கைவசம் வைத்துக்கொண்டு விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்து ஜெயித்து விடலாம் என நம்புகிறார்.

Also read: யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் விஜய்.. அரசியலுக்கு ஆப்படிக்கும் விதமாக அற்ப வேலை செய்யும் தளபதி

Trending News