வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தயாரிப்பாளர்களால் ஏமாந்து போன பாலா பட வில்லன்.. நிஜத்துல இப்படி ஒரு ஏமாளியா?

Director Bala: பொதுவாக பாலா படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களை பிரமிக்கும் விதமாக இருக்கும். நடிக்கவே தெரியாதவர்களாக இருந்தாலும் பாலா அவர்களிடமிருந்து திறமையான நடிப்பை வாங்கிவிடுவார். இதனால்தான் அவர் படத்தில் நடித்த பிறகு பல பிரபலங்கள் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களும் பாலா படத்திற்கு பிறகு தான் மிகப்பெரிய உயரத்தை தொட்டனர். இந்நிலையில் பாலா படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஒருவர் இப்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். இதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் அவரை ஏமாற்றியது தான்.

Also Read : பாலாவின் காலில் விழுந்த பாலிவுட் நடிகை.. வட இந்தியாவில் நடந்த சம்பவம்

அதாவது ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அதன் பிறகு காமெடியில் கலக்கியவர் மொட்டை ராஜேந்தரன். அதுவும் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் டெரர் வில்லனாக மிரட்டி இருப்பார். இவர் தெறி, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் காமெடியிலும் ஒரு கை பார்த்திருப்பார். இப்போது யோகி பாபு போல் ஒரு காலகட்டத்தில் மொட்டை ராஜேந்தர் எல்லா படங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வந்தார்.

ஆனால் சமீபகாலமாக அவரை படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள தூக்குதுரை என்ற படத்தில் மட்டும் மொட்டை ராஜேந்தரன் நடித்திருக்கிறார். இப்போது தெலுங்கில் மட்டும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம்.

Also Read : போலீஸ் கேரக்டரில் அசத்திய 5 நடிகைகள்.. மொத்தமாக மாறிய பாலா பட நாச்சியார்

இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் தான். அதாவது மொட்டை ராஜேந்தரன் இடம் பாதி சம்பளத்தை கொடுத்துவிட்டு படங்களில் கமிட் செய்துள்ளார்கள். படம் முடிந்த பிறகும் அந்த பாக்கியம் கொடுக்காமலேயே ஏமாற்றி விட்டனர்.

மொட்டை ராஜேந்தரும் மீண்டும் போய் அவர்களிடம் பணத்தை கேட்க வில்லையாம். இதனால் தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்தில் இவரை புக் செய்தால் முந்தைய படத்தின் பாக்கி தொகையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவரை நிராகரித்து விட்டனர். ஆகையால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

மொட்டை ராஜேந்தரன் சில படங்களில் டெரர் பீஸ் ஆக நடித்திருந்தாலும் உண்மையில் ஏமாளியாக இருந்துள்ளார். இவரை வைத்து நன்கு காசு பார்த்த தயாரிப்பாளர்களால் இப்போது ஃபீல்ட் அவுட் ஆக்கிவிட்டார். ஆனாலும் வயிற்று பிழைப்பிற்காக இப்போது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார் மொட்டை ராஜேந்தரன்.

Also Read : விடாமல் சுற்றி வந்த விஜய் டிவி பிரபலம்.. கொடூர முகத்தை காட்டி கலங்கடித்த பாலா

Trending News