புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஆண் இனம்.. DNA-வை வைத்து விளையாடும் இயற்கை, உலுக்கிய ரிப்போர்ட்

Men in danger y- chromosomes: நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் என்ற ஆய்வு மூலம் இன்னும் 11 மில்லியன் வருடங்களில் ஒயிட் குரோமோசோம் முற்றிலுமாக அழிவை சந்திக்கப் போகிறதாக ஒரு ரிப்போர்ட்டை கொடுத்து ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆண் இனம் அழிந்து வருவதாகவும், இன்னும் பல மில்லியன் வருடங்களுக்கு பின் முற்றிலுமாக ஆண் இனம் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவியல் கண்காணிப்பு மூலம் திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது.

பொதுவாக பெண்களிடம் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும். ஆண்களின் உடலில் X மற்றும் Y என இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். ஓர் உயிரினத்தின் பாலினத்தை தீர்மானிப்பது ஒரு குரோமோசோம் தான். கரு உருவாகத் தொடங்கி 12 வாரங்களில் இந்த ஒயிட் குரோமோசோமின் தூண்டுதலால் ஆணுறுப்பு உருவாகத் தொடங்கி அந்த கரு ஆண் என்ற பாலினத்தை அடையும்.

டிஎன்ஏ வைத்து இயற்கை விளையாடும் ஆபத்தான விளையாட்டு

ஆனால் தற்போது y குரோமோசோம் கொஞ்சம் கொஞ்சம் அழிந்து வருகிறது. இன்னும் சில மில்லியன் வருஷங்களுக்குப் பிறகு முற்றிலுமாக அழிவை சந்திக்கலாம் என்று ஒரு ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது. அதாவது ஐரோப்பாவில் வளர்ந்து வரும் மோல் வோல்ஸ் (Mole voles) என்ற உயிரினமும், ஜப்பானில் ஸ்பைனி ரேட் என்னும் முள் எலிகளும் ஒயிட் குரோமோசோமை முற்றிலுமாக இழந்து விட்டது.

இந்த இரண்டிலுமே Y குரோமோசம் அழிந்து போனதால் X குரோமோசோம்கள் மட்டும் தனியாகவோ அல்லது இணைந்து உடலில் இருக்கிறது. அதனால் Y குரோமோசோம் இல்லாமல் எப்படி பாலினத்தை தீர்மானிக்கிறது என்பது அறியப்படாத வகையில் தற்போது இதைப் பற்றிய ஆய்வு போய்க் கொண்டிருக்கிறது.

இதே மாதிரி பல மில்லியன் வருஷத்துக்கு பின் ஆண் இனமே இல்லாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. DNA வைத்து இயற்கை விளையாடும் மிகப்பெரிய ஆபத்தாக கூட இருக்கலாம் என்று அறிவியல் ஆய்வு தகவலை வெளியிட்டிருக்கிறது. 90ஸ் காலத்தில் இருக்கும் ஆண்களுக்கு இப்பொழுது பெண்கள் கிடைக்காமல் திருமணமாகாமல் தவித்து வருகிறார்கள்.

இன்னும் போற போக்க பார்த்தா ஆண் குழந்தைகள் பிறப்பது கம்மியாக நிலையில் பெண்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆண்கள் கிடப்பது அபூர்வமாக இருக்கப் போகிறது.

Trending News