திரை உலகில் இப்போது பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பல வருடங்களாக இந்த பிரச்சனை இருந்தாலும் தற்போது தான் நடிகைகள் இது குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் டாப் நடிகை ஒருவரின் கணவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பகீர் கிளப்பி இருக்கிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் தீபிகா படுகோன். தமிழில் இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கோச்சடையான் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இவருடைய கணவர் தான் ரன்வீர் சிங். பாலிவுட்டில் க்யூட் ஜோடிகளாக வலம் வரும் இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
Also read: ஆபாசமாக நடிப்பதற்கு உங்கள் கணவர் என்ன கூறினார்.? ஒரே பதிலால் அசர வைத்த தீபிகா படுகோண்
திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோன் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய ரன்வீர் சிங் ஆரம்ப காலத்தில் திரைத்துறையில் தனக்கு நேர்ந்த சில மோசமான அனுபவங்களை பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார். அதில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் மற்றொருவர் தன்னை ஒரு இருட்டான இடத்திற்கு அழைத்து நான் கவர்ச்சியாக இருக்கிறேன் என்று கூறி பட வாய்ப்பு தருவதாக கூறினார். மேலும் மறைமுகமாக அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய கசப்பான அனுபவங்களை நான் கடந்து வந்திருக்கிறேன்.
நடிக்க வந்த புதிதில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால்தான் இப்போது எனக்கு கிடைக்கும் இந்த
வாய்ப்புகளின் மதிப்பு எனக்கு தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால் ஆண்களும் இது போன்ற தொல்லைகளை அனுபவித்து வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் ரன்வீர் சிங் கூறியிருக்கும் இந்த விஷயம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வருபவர் தான் ரன்வீர் சிங். சமீபத்தில் கூட இவர் ஒரு பத்திரிகைக்காக ஆடை இல்லாமல் போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி இவர் இப்போது பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
Also read: பிகினி, உதடு முத்தம் என தெறிக்க விட்ட தீபிகா படுகோனே பட ட்ரைலர்.. பாதி வீடியோக்கு மேல ரொம்ப அநியாயம்