வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

டபுள் மீனிங் கமெண்டால் கடுப்பான குஷ்பூ.. ட்வீட்டை டெலிட் செய்து ஓடிய அந்த நபர்

முன்னணி நடிகையாக பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்த குஷ்பூ தற்போது அரசியலிலும் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பது, நடிப்பு என்று நிற்கக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மூத்த சகோதரர் உடல் நலமில்லாமல் இருப்பதாகவும், அவர் குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் குஷ்புவின் சகோதரர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். இதை மிகவும் வருத்தத்துடன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்த குஷ்பூ என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது என்று கண்ணீருடன் குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வந்தனர்.

Also read: கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ அண்ட் கோ.. அப்ப நீங்க தப்பு தப்பா பேசினது ஞாபகம் இல்லையா!

ஆனால் ஒரே ஒரு நெட்டிசன் மட்டும் இந்த பதிவினை பார்த்து அக்காவுக்கு சின்னத்தம்பி ஞாபகம் வந்திருச்சு என டபுள் மீனிங்கில் கருத்து தெரிவித்திருந்தார். ஏற்கனவே குஷ்பூ தன்னை கிண்டல் அடிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிடுவார். அதிலும் இப்போது மிகுந்த வருத்தத்தில் இருக்கும் அவருக்கு இந்த பதிவு கடும் கோபத்தை வரவழைத்தது.

அந்த வகையில் காளி அவதாரம் எடுத்த குஷ்பூ அதற்கு தரமான ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது என்னுடைய செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்தால் நேரில் வா, இதுதான் உங்கள் கீழ்த்தரமான புத்தி மாறவே மாட்டீங்களாடா, நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர்னு சொல்லிக்க வெட்கப்படனும் என ஆவேசத்துடன் ட்வீட் போட்டிருந்தார்.

Also read: இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

இதற்கு குஷ்புவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவித்திருந்தனர். மேலும் சிலர் இது போன்ற விஷயங்களுக்கு நீங்கள் பதிலளிக்க தேவையில்லை என்றும் அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் குஷ்புவுக்கு இப்படி ஒரு கமெண்ட் கொடுத்திருந்த அந்த நபர் உடனே தன்னுடைய ட்வீட்டை நீக்கிவிட்டார்.

அது மட்டுமல்லாமல் எனக்கும் உங்களை டி என்று பேச ரொம்ப நேரம் ஆகாது. உன்னை அக்கா என்று அழைத்ததற்கு மன்னிக்கவும். அந்த பதிவை நான் நீக்கினாலும் நான் தவறான அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை. உங்களுடைய கருத்து மாற வேண்டும் என்றும் அவர் பதில் அளித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

Also read: அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

Trending News