Bigg Boss Tamil 8: இந்த வாரம் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முதலாவதாக தீபக் குடும்பம் வந்தது. தீபக் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பையன் மற்றும் மனைவி வந்து பேரின்பத்தை கொடுத்துவிட்டார்கள். தீபக்கும் இவர்களை பார்த்த சந்தோஷத்தில் ரொம்பவே மகிழ்ச்சியாகிவிட்டார்.
அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பத்துடன் பேசி முத்துக்குமாரும் நானும் ஒன்னு தான். நானும் அதிகமாக பேசுவேன் முத்துக்குமாரும் என்னைப் போல் தான் அதிகமாக பேசி வருகிறார். அந்த வகையில் எல்லோரும் என்னுடைய வீட்டிற்கு வந்தால் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நானும் முத்துக்குமார் மட்டும் தனியாக சென்று இது இப்படி இருந்திருக்கலாம் இதில் அந்த மாதிரி நடந்திருக்கலாம் என்று பேசிக் கொண்டே இருப்போம்.
அப்படிப்பட்ட கேரக்டர் தான் நாங்கள் இரண்டு பேரும் என்று தீபக் மனைவி சொல்லி இருந்தார். அடுத்ததாக மஞ்சரியின் குடும்பமும் வந்தது. இதில் மஞ்சரியின் மகன் வந்த நிலையில், மஞ்சரி கேட்ட கேள்வி என்னவென்றால் டெவில் டாஸ்க் என்னை பார்த்து பயந்து விட்டாயா என்று கேட்டார். அதற்கு அவருடைய மகன், இல்லை என்று சொல்லி நீ என்னுடைய அம்மா. உன்னை பார்த்து நான் எப்படி பயப்படுவேன் என்று சொல்லி ஒரு சென்டிமென்ட் தருணத்தை உண்டாக்கி விட்டார்.
அடுத்ததாக சௌந்தர்யா என்ன சொன்னாலும் அதற்கு கவுண்டர் கொடுக்கும் விதமாக விளையாட்டுத்தனமாக மஞ்சரியின் மகன் பேசி நோஸ்கட் பண்ணி விட்டார். அத்துடன் இந்த வீட்டில் யாரை பிடிக்கும் என்று கேட்ட பொழுது என்னுடைய அம்மா அதன் பிறகு முத்துக்குமார் தான் என்று சொல்லிவிட்டார். பிறகு மஞ்சரி, நீ இங்கே வந்த பிறகு உன்னிடம் பேசிய இவர்களில் யாரை ரொம்ப பிடித்து விட்டது என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு மஞ்சரியின் மகன், ஜாக்லின்னை தான் அதிகமாக பிடிக்கும் என்று சொல்லிவிட்டார். உடனே சௌந்தர்யா, என்னை பிடிக்காதா என்று கேட்டதற்கு கொஞ்சோண்டு தான் பிடிக்கும் என்று கூறிவிட்டார். அடுத்ததாக மஞ்சரியின் குடும்பத்திடம் பிக் பாஸ் இந்த வீட்டில் யாரு முரண்படாக இருக்கிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மஞ்சரியின் அம்மா, அருணை பார்த்து கிச்சனில் உங்களுக்கும் என் மகளுக்கும் விவாதம் நடைபெற்று பொழுது நீங்கள் தான் ப்ராஜெக்ட் என்ற வார்த்தையை யூஸ் பண்ணுங்க.
ஆனால் நீங்கள் சொல்லவே இல்லை என்று என்னுடைய மகளை பார்த்து பெரிய பஞ்சாயத்தை கூட்டிட்டிங்க என்று அருணை பார்த்து கேள்வி கேட்டு விட்டார். அடுத்ததாக மஞ்சரியின் அண்ணன், விஷாலிடம் தன் மனசுக்குள் மிகப்பெரிய என்டர்டைன்மென்ட் பண்ணக்கூடிய நபர் என்ற நினைப்பில் பல விஷயங்களை செய்து வருகிறீர்கள். ஆனால் அந்த அளவிற்கு பெருசாக எதுவும் எடுபடவில்லை என்று மறைமுகமாக தாக்கி விட்டார்.
இதனை தொடர்ந்து விஷாலின் அம்மா அப்பா வந்து சென்டிமென்ட் காட்சிகளை காட்டி அனைவரது மனதையும் உருக வைத்து விட்டார்கள். விஷால் என்ன தான் சில தவறுகளை செய்திருந்தாலும் வன்மமாகவும் மோசமாகவும் இதுவரை யாரிடமும் நடந்து கொள்ளவில்லை. அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சூழ்நிலை காரணமாக தான் வெளியே தவறாக தெரிகிறார்களே தவிர அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கக்கூடாது.