வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022ல் பரபரப்பை கிளப்பிய 5 பிரபலங்களின் திருமணம்.. 7 வருட காதலில் ஜெயித்த நயன்-விக்கி ஜோடி

இந்த வருடம் ஒரு சில பிரபலங்களுக்கு அமோகமாகவும் ஒரு சிலருக்கு எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஆண்டாகவும் இருந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் பல முக்கிய பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அதில் மிகவும் பரபரப்பை கிளப்பிய திருமணங்கள் பற்றியும் அந்த பிரபலங்கள் யார் என்பதை பற்றியும் இங்கு காண்போம்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்: லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி தன் காதலர் விக்னேஷ் சிவனை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த போது இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் இவர்கள் இந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

அதற்கும் மேலாக திருமணம் நடந்த ஐந்து மாதங்களிலேயே நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட அவர் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் இப்போது அவர் கணவர், குழந்தை என்று சந்தோஷமாக இருக்கிறார்.

Also read: 2022 ஆம் ஆண்டு ரசிகர்களை கொண்டாட வைத்த 6 மியூசிக் டைரக்டர்கள்.. ஏ ஆர் ரகுமானை பின்னுக்கு தள்ளிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி

ஆதி – நிக்கி கல்ராணி: மரகத நாணயம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்தனர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட இவர்களுடைய காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. அந்த வகையில் இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஹரிஷ் கல்யாண் – நர்மதா: விஜய் டிவியின் பிக்பாஸ் மூலம் அதிகம் பிரபலமான இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவர் கடந்த அக்டோபர் மாதம் நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் ஆடம்பரமாக நடைபெற்றது.

Also read: 2022-ல் அதிகமா பேசப்பட்டு கொடிகட்டிப் பறந்த 6 இயக்குனர்கள்.. மணிரத்தினத்துக்கே சவால் விட்ட இளம் இயக்குனர்

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்: தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் இருவரும் நட்புடன் பழக ஆரம்பித்தார்கள். அதை தொடர்ந்து காதலிக்க ஆரம்பித்த இவர்கள் பற்றி பல மாதங்களாகவே கிசுகிசுக்கள் வெளிவந்தது. அதைப் பற்றி விளக்கம் அளிக்காத இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இவர்கள் கடந்த நவம்பர் 28ஆம் தேதி மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

ஹன்சிகா – சோஹாலி கதூரியா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்த ஹன்சிகா இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் தற்போது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அந்த வகையில் கடந்த 4ம் தேதி இவர் தன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Also read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்

Trending News