புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெறித்தனமாக காத்திருக்கும் சந்தானம்.. இணைந்த மாஸ்டர் பட பிரபலம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்த சந்தானம் ஹீரோவாக நடிக்க களம் இறங்கினார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக தயாராக உள்ளது.

இதைத்தொடர்ந்து மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் சந்தானம் நடித்துள்ளார். இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அமலா பாலின் ஆடை, வைபவ்வின் மேயாதமான் படங்களை இயக்கிய ரத்னவேல் இயக்கத்தில் சந்தானம் நடிக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் ரத்னவேல் பணியாற்றி உள்ளார். தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் வசனகர்த்தாவாக ரத்னவேல் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ரத்னவேலு, சந்தானத்தை வைத்து படம் இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தில் ஆக்ஷன் கலந்த சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை சந்தானம் நடித்த கதாபாத்திரங்களை விட இது சற்று வித்தியாசமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கயுள்ளார். இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், வெங்கட்பிரபு, நெல்சன் திலீப்குமார் ஆகிய ஐந்து இயக்குனர்களும் வெளியிட்டனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending News