திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வடிவேலுவை கேள்வி கேட்டு டென்ஷன் செய்த மீடியா.. சமாளிக்க முடியாமல் மைக்கோடு ஓடிய வைகை புயல்

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பிறகு வடிவேலு பிசியாக மாறி இருக்கிறார். எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இவரை தற்போது மீடியாக்கள் சுற்றி வளைத்து கேள்வி கேட்டு டென்ஷன் படுத்தி இருக்கிறார்கள். அதை சமாளிக்க முடியாமல் வைகைப்புயல் தெறித்து ஓடிய சம்பவம் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

அதாவது அவர் இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள வடிவேலுவின் நடிப்பும், கேரக்டரும் படத்தில் எப்படி இருக்கும் என்பதை காணவே ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் வடிவேலு.. பிரம்மாண்டமாக மேடை போட்டு கொடுக்கும் உதயநிதி

இந்நிலையில் நேற்று மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கமல், சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் வடிவேலுவின் பேச்சும் கூடுதல் சுவாரசியத்தை அளித்தது. அந்த வகையில் பத்திரிக்கையாளர்கள் இவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த வடிவேலு, நான் எங்கேயும் போகவில்லை, மீம்ஸ் வழியாக உங்களுடன் தான் இருக்கிறேன், எனக்கு கேப்பே கிடையாது என்று கூறினார். அதை தொடர்ந்து மாமன்னன் படம் தேவர் மகனுக்கு பிறகு எனக்கு ஒரு முக்கியமான படம் என்றும் தெரிவித்தார். ஆனால் இது முழுக்க முழுக்க அரசியல் படமாகவும் உங்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறினார்.

Also read: 8 வருடம் பட்டும் புத்தி வரல.. ஓவர் திமிரு காட்டியதால் வடிவேலுவை தூக்கி எறிந்த நடிகர்கள்

அதைத்தொடர்ந்து அவருடைய கதாபாத்திரம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் டென்ஷனான வடிவேலு இப்படியே கதையை போட்டு வாங்கி விடலாம் என்று பாக்குறீங்களா, அப்புறம் யார் படத்தை பார்ப்பாங்க என்று சமாளித்தபடி பதில் கூறினார். இருப்பினும் அவரிடம் தொடர்ச்சியாக பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதனால் கடுப்பான வைகைப்புயல் இங்கிருந்தா என் வாய புடுங்கிடுவீங்க என்ற ரீதியில் மைக்கை தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆனார். இதனால் மாமன்னன் விழா மேடையே கொஞ்ச நேரம் கலகலப்பாக மாறியது. இவ்வாறாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழா படத்திற்கான மிகப்பெரும் பிரமோஷனாக இப்போது மாறி இருக்கிறது.

Also read: பண்ணை வீட்டில் ஒன்னும் பண்ண முடியலன்னு கடும் ஆதங்கம்.. வடிவேலு பார்ட்னரிடம் பஞ்சரான பயில்வான்

Trending News