செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அக்ரீமெண்ட் போடும் முன்பே அடித்துக் கொள்ளும் கூட்டம்.. வாரிசு, துணிவு வைத்திருக்கும் ட்விஸ்ட்

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவை திறந்தாலே வாரிசு, துணிவு படங்கள் பற்றிய அப்டேட்கள் தான் வந்து குவிகிறது. ஏற்கனவே விஜய், அஜித் ரசிகர்களுக்கு இருக்கும் வாய்க்கால் தகராறு சிந்துபாத் போல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத இருப்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனாலேயே இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி கலாய்த்துக்கொண்டு, போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே ஒரு பெரிய பஞ்சாயத்து ட்விட்டர் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது துணிவு திரைப்படத்திற்கு தான் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: பயங்கர ஸ்பீடில் இருக்கும் வாரிசு.. மேனேஜரை வண்டை வண்டையாக கிழிக்கும் ரசிகர்கள்

ஏனென்றால் துணிவு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் அவர் துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் ஏற்பாடு செய்வார் என்று வெளிப்படையான கருத்துக்கள் பரவி வருகிறது. அதனால் அஜித் ரசிகர்களும் வாரிசு திரைப்படம் அவ்வளவு தான், தியேட்டரே கிடைக்கவில்லை என்று ஒரு கருத்தை பரப்பி வருகின்றனர்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் துணிவு திரைப்படத்திலிருந்து இன்னும் ஒரு அப்டேட் கூட வரவில்லை. ஆனால் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலே வெளியாக போகிறது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி சோசியல் மீடியா ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வாரிசு, துணிவு திரைப்படத்திற்கு இன்னும் தியேட்டர்களே ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Also read: விஜய்யுடன் நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. தளபதி 67க்கு அர்ஜுனை போல் நோ சொன்ன 90ஸ் ஹீரோ

இது குறித்து இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதற்குள்ளாகவே ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டு கொண்டு வருகின்றனர். பொதுவாக திரைப்படம் வெளியாவதற்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்புதான் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு அக்ரீமெண்ட் போடப்படும்.

அந்த வகையில் இன்னும் இந்த இரண்டு படங்களுக்கும் அக்ரிமெண்ட் கையெழுத்தாகவில்லை. பட ரிலீசுக்கு ஒரு வாரம் முன்பு தான் இந்த விஷயங்கள் அனைத்தும் ஒப்பந்தம் செய்யப்படும். அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் பற்றிய மர்மம் இன்னும் சில நாட்களுக்கு நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

Also read: வாரிசு படத்திற்கு கும்பிடு போட்ட விஜய்.. தடபுடலாக ஆரம்பமாகும் தளபதி 67

Trending News