வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அப்பா வயது நடிகருடன் ஜோடி போடும் மில்க் பியூட்டி நடிகை.. 40 வயது வித்தியாசம் எல்லாம் ஓவரா இல்லையா!

சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு வயது என்பது பிரச்சனையே இல்லை. அவர்களது மார்க்கெட் குறையும் வரை ஹீரோவாக நடித்துக் கொண்டே இருக்கலாம். நடிகைகளுக்கு அப்படியல்ல. திருமணம் செய்துவிட்டால் மார்க்கெட் டவுன் ஆகி விடும். 30 வயதை கடந்தால் மவுசு குறைந்து விடும் என ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது.

அதிலும் திறமை இருந்தும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அத்துணை பேரையும் அட்ஜஸ்மென்ட் செய்தால் மட்டுமே அந்த படத்தில் அவர்கள் கதாநாயகியாக நடிக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் தலை காட்டிய மில்க் பியூட்டி இப்போது மறுபடியும் மாஸ் நடிகருக்கு ஜோடி போட்டு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

Also  Read: புகழ் போதையில் மகளுக்கே மாமா வேலை பார்த்தா அப்பா.. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன சம்பவம்

ஆனால் அந்த மாஸ் நடிகருக்கும் மில்க் பியூட்டிக்கும் 40 வயது வித்தியாசம். அப்பா வயதில் இருக்கும் நடிகருடன் கதாநாயகியாக நடிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா! என நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர். இருப்பினும் மில்க் பியூட்டிக்கு மாஸ் நடிகருடன் முதன்முதலாக ஜோடி போடும் வாய்ப்பு இப்போதுதான் வந்திருக்கிறது. அதை நினைத்து தான் அவர் பெருமைப்படுகிறாரே தவிர, வயது வித்தியாசம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.

விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் மாஸ் நடிகரின் படத்தில் யார் கதாநாயகி என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்க் பியூட்டி போட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து, அவர்தான் மாஸ் நடிகரின் ஜோடி என்பது உறுதியானது.

Also  Read: கேடு கெட்ட பழக்கத்தால் பறிபோன குழந்தை பாக்கியம்.. கணவர் விட்டுச் சென்றதால் பலான தொழிலுக்கு சென்ற நடிகை

இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே மில்க் பியூட்டி நடிக்கும் தமிழ் படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் தான் தெலுங்கு, ஹிந்தி படங்களில் இவ்வளவு நாள் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழ் பக்கமே தலை காட்டாமல் இருந்தார். ஆனால் இப்போது 40 வயது மூத்த நடிகருடன் ஜோடி போட்டு மறுபடியும் கோலிவுட்டில் ஏகப்பட்ட கனவுடன் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

Trending News