நடிகர் ஜெய்யை வைத்து, வித்தியாசமான கதைக்களத்துடன் திரைப்படம் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்த ஒரு இயக்குனர் இப்போது கோலிவுட்டில் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்த படம் நிறைய விருதுகளை அள்ளி குவித்தது.
பகவதி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த ஜெய் பின்பு பல வருடங்கள் கழித்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 600028 என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் ஓரளவு ஹிட் படங்கள் கொடுத்த ஜெய்யை மாஸ் ஹீரோ ஆக்கியது ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் தான்.
Also Read: ஜெய்யை தூக்கிவிட உதவும் ஜெயிலர்.. தலைவர் ராசியால் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு
‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து AR முருகதாஸ் தயாரித்தார். இந்த படத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாலை விபத்து மற்றும் உடல் உறுப்புகள் தானம் என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இதை அழகான காதல் கதையுடன் சேர்த்து திரைக்கதையை கொடுத்திருப்பார் இந்த படத்தின் இயக்குனர் சரவணன். இவர் இயக்குனர் AR முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
Also Read: சர்ச்சை நாயகனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாணி போஜன்.. அதல பாதாளத்திற்கு சென்ற மார்க்கெட்
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதும் சரவணன் தான். இந்த படம் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது. மற்றும் பல விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்த படத்திற்கு பிறகு சரவணன் விக்ரம் பிரபுவை வைத்து ‘இவன் வேற மாதிரி’ படத்தை எழுதி இயக்கினார்.
‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு பிறகு இவர் மீண்டும் ஜெய்யுடன் இணைந்து ‘வலியவன்’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மையா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சரவணன் கடந்த 7 வருடங்களாக கோலிவுட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை.
Also Read: ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. தயாரிப்பாளர் செய்த சூழ்ச்சி