இந்த வருடம் ஆரம்பித்த நேரமே சரியில்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல நடிகர் தொடர்ந்து பல சறுக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் பிரச்சனையில் இருக்க திரை வாழ்விலும் அடுத்தடுத்த தோல்விகள் வந்து அவரை நிலைகுலைய செய்து விட்டது.
ஆரம்பத்தில் ஒரு படம் பெரும் தோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக வந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொள்ளாமல் அவசர அவசரமாக அடுத்த திரைப்படத்தை பெரிய படத்துடன் மோத விட்டு தற்போது நொந்து போய் இருக்கிறார் அந்த நடிகர்.
Also read : வசூல்ராஜாவுக்கு விழுந்த பலத்த அடி.. தனது படத்தை தானே வாங்கி வெளியிடும் கொடுமை
அதனால் இனிமேல் இப்படி அவசரப்படக்கூடாது என்று அடுத்த படத்தைக் கூட கொஞ்சம் தள்ளி வெளியிட அவர் முடிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் தற்போது எங்கு இருக்கிறார் என்று ஆள் வைத்து தேடும் அளவுக்கு தனிமையை தேடி சென்று விட்டாராம். சென்ற வருடம் மனைவி குழந்தைகளுடன் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடிய நடிகர் இந்த வருடம் தனி மரமாக நிற்கிறார்.
எப்படியும் இந்த பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாடி விடலாம் என்று எதிர்பார்த்தவருக்கு அவருடைய மனைவி ஏமாற்றத்தை கொடுத்து விட்டார். வாரிசுகளும் அம்மா பேச்சை மீற முடியாமல் தாத்தா வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடி இருக்கின்றனர். அந்த போட்டோக்கள் மீடியாக்களில் பரவி நடிகரின் சோகத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.
Also read : மீசை நரைத்தாலும் ஆசை விடவில்லை.. பணத்தைக் காட்டி படுக்கைக்கு அழைத்த 64 வயது இயக்குனர்
மேலும் பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை பார்த்த நடிகர் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டார். அதனால் தன் நெருங்கிய உறவுகளுடன் கூட பண்டிகையை கொண்டாடாமல் அவர் ஒதுங்கி விட்டாராம்.
அவரை நேரிலும் பார்க்க முடியாமல், போனிலும் பிடிக்க முடியாமல் அவருடைய நண்பர்கள் தான் இப்போது தத்தளித்து கொண்டிருக்கிறார்களாம். அடுத்தடுத்த தோல்விகள் தான் தற்போது நடிகரை நிம்மதியை தேடி செல்ல வைத்திருக்கிறது என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பி வருகிறது.
Also read : குழந்தை பெறும் தகுதியை இழந்த வாரிசு நடிகை.. வாடகை தாய் முடிவால் தலை தெறிக்க ஓடிய காதலர்