ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

சரவணன் செய்த உருப்படியான விஷயம், நொடிந்து போகும் பாண்டியன்.. குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்ட அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு சக்திவேலு போட்ட பிளான் படி பாண்டியன் குடும்பத்தை கெடுப்பதற்கு அரசியை பகடகாயாக பயன்படுத்த நினைத்தார்கள். அதன்படி குமரவேலு அரசியை காதலிப்பதாக சுற்றி வந்தார். இந்த மக்கு அரசியும் குமரவேலு விரித்த வலையில் சிக்கிக் கொண்டு காதல் அட்ராசிட்டிகளை பண்ண ஆரம்பித்தார்.

அந்த வகையில் பைக்கில் ஊர் சுற்றுவது, ஹோட்டலில் சாப்பிடுவது, வீட்டில் இருக்கும் பொழுது மணிக்கணக்காக போன் பண்ணி பேசிக் கொண்டிருப்பது என்று தொடர்ந்து செய்து வந்தார். இதையெல்லாம் தாண்டி தற்போது குமரவேலுடன் படம் பார்ப்பதற்காக சினிமாவிற்கும் வந்து விட்டார். அந்த சமயத்தில் சரவணன் வேலை விஷயமாக அங்கு வந்த பொழுது இரண்டு பேரும் பேசிக் கொண்டிருப்பதை சரவணன் பார்த்து விடுகிறார்.

உடனே சரவணன் கோபத்துடன் குமரவேலுவிடம் என்ன சொல்லி என் தங்கையை இங்கே கூட்டிட்டு வந்தாய் என்று சட்டையை பிடித்து சண்டை போட ஆரம்பித்து விட்டார். அப்பொழுது குமரவேலு நானும் உங்க தங்கச்சியும் காதலிக்கிறோம் என்று சொல்கிறார். அப்பொழுது குமரவேலு மற்றும் சரவணனுக்கு இடையே சண்டை ஆரம்பித்துவிட்டது. அந்த நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் உன் தங்கச்சியை வீட்டிற்கு கூட்டிட்டு போய் காதும் காதுமாய் வைத்து பேசி முடிங்க என்று சொல்லிவிடுகிறார்கள்.

சரவணனும் அரசியை கூட்டிட்டு கோபமாக பைக்கில் கிளம்பி விடுகிறார். போகும் பொழுது செந்திலுக்கு போன் பண்ணி அப்பாவை கூட்டிட்டு உடனே வீட்டிற்கு வா என்று தகவலை சொல்லி விடுகிறார். ஆனால் அரசி அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இருந்தாலும் சரவணன், வீட்டில் உள்ள எல்லாரையும் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவில்லை. அந்த குமரவேலு எவ்வளவு பெரிய அயோக்கியன் என்று தெரிந்தும் அவன போய் நம்பி காதலிக்கிறாய்.

எத்தனை நாளாக வீட்டில் பொய் சொல்லி இப்படி வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறாய், எங்களை எல்லாம் விடு உன்னை சின்ன குழந்தை என்று அப்பா நம்பி கொண்டிருக்கிறார். அவருடைய நம்பிக்கையும் வீணாக்கி விட்டாய் என்று கோபமாக பேசிவிட்டு அரசியை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அந்த வகையில் சரவணன் எப்படியும் வீட்டில் போய் அரிசி செய்த விஷயத்தை போட்டு உடைத்து விடுவார்.

இதனால் பாண்டியன், தான் வளர்ப்பு தவறாகி விட்டது என்று மனம் உடைந்து அல்லல்படப் போகிறார். இதுதான் சான்ஸ் என்று சக்திவேல் அரசியை எப்படியாவது குமரவேலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று மறுபடியும் சதி பண்ணப் போகிறார். ஒட்டுமொத்தமாக பாண்டியன் குடும்பத்தின் மானத்தை அரசி காற்றில் பறக்க விட்டு விட்டார்.

Trending News